துப்பாக்கி உரிமத்திற்கு லஞ்சம்: சிபிசிஐடி விசாரணை- அச்சத்தில் உறைந்துள்ள போலீசார்
நெல்லை: துப்பாக்கி உரிமம் வழங்கியதில் ஏற்பட்ட முறைகேடு காரணமாக சிபிசிஐடி விசாரணை நடத்து வருவதால் புதிதாக யார் துப்பாக்கிக்கு உரிமம் கேட்டாலும் போலீசார் பயத்துடன் பார்க்கின்றனர்.
நெல்லை மாநகரில் கடந்த 2012ம் ஆண்டு துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்த 68 பேரில் 48 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டன. இதில் ஓரே குடும்பத்தை சேர்ந்த பலருக்கும் உரிமம் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முந்தைய ஆண்டுகளில் ஓற்றை இலக்கத்தில் மட்டுமே துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு மாறாக ஓரே ஆண்டில் பலருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டதால் சந்தேகம் எழுந்தது.
விண்ணப்பித்தவர்களின் குடும்ப பின்னணி, குற்ற பின்னணி, ஏதேனும் வழக்குகள் உள்ளதா என்றும் விசாரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த உரிமத்திற்காக பல போலீஸ் அதிகாரிகள் ரூ.2 லட்சம் வரை பெற்றதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து சிபிசிஐடி போலீசார் 2012ம் ஆண்டு டிசம்பரில் விசாரணையை தொடங்கினர். இரண்டு முறை சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகள் நெல்லைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் சில போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ஆனால் 2013ம் ஆண்டு உரிமம் கேட்டு விண்ணப்பித்த 9 பேரில் இதுவரை யாருக்கும் உரிமம் கொடுக்கவில்லை போலீசார். 2012ம் ஆண்டு உரிமம் வழங்கியதில் பிரச்சனை ஏற்பட்டதால் போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் விண்ணப்பங்கள் தேங்கி கிடக்கின்றன. இதனால் தற்போது உரிமம் கேட்டு யார் வந்தாலும் சந்தேகம் கொண்டு பார்த்து வருகின்றனர்.
ஒருவேளை சிபிசிஐடி போலீசாரே முறைகேட்டை கையும் களவுமாக பிடிக்க போலியாக துப்பாக்கி உரிமம் கேட்டு வந்துள்ளார்களோ என்று பயத்துடன் பார்த்து வருகின்றனர். தற்போது துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்து வருபவர்களின் குடும்ப பின்னனி, குற்றபின்னனி குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications