சொத்துக்குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு... சசிகலா பதவியேற்பு தேதி தள்ளி வைக்கப்படுமா?
சொத்துக்குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல்வராக சசிகலா பதவியேற்பது தள்ளி வைக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் சசிகலா முதல்வராக பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 2015ஆம் ஆண்டு நீதிபதி மைக்கேல் டி குன்ஹா 4 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதனை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு கெர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதில் 4 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாராசாமி ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

கடந்த மாதமே எதிர்ப்பார்க்கப்பட்டது
இதனை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிந்துள்ள நிலையில் கடந்த மாதமே தீர்ப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்க்பபட்டது.

ஒரு வாரத்தில் தீர்ப்பு
இந்நிலையில் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆளும் அதிமுக சட்டசபைக்குழு தலைவராக நேற்று தேர்வு செய்யப்பட்ட சசிகலா 9ஆம் தேதிக்குள் தமிழக முதல்வராக பதவியேற்பார் என தகவல் வெளியானது.

பதவியேற்பதில் சிக்கல்
இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு காரணமாக சசிகலா பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பீதியில் மன்னார்குடி கும்பல்
சசிகலா பதவியேற்பு தேதி தள்ளி வைக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த திடீர் அறிவிப்பு முதல்வராகும் எண்ணத்தில் இருந்த சசிகலா தரப்பை பீதியடையச் செய்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications