மதுரை அன்பு புகார்: கொலை மிரட்டல் வழக்கில் சிவசக்தி பாண்டியன் கைது!

காதல் கோட்டை, காலமெல்லாம் காதல் வாழ்க, வான்மதி, காதலே நிம்மதி, கண்ணெதிரே தோன்றினாள், கடல் பூக்கள், வெற்றிக்கொடி கட்டு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்தவர் சிவசக்தி பாண்டியன். தயாரிப்பாளர் சங்கப் பொறுப்பிலும் இருந்தவர்.
இவர் மீது மதுரையை சேர்ந்த சினிமா வினியோகஸ்தர் மற்றும் பைனான்சியர் அன்புசெழியன் 15.3.2006-ம் ஆண்டு ஒரு புகார் மனு கொடுத்தார். தனக்கும் சிவசக்தி பாண்டியனுக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் உள்ளது என்றும் அது தொடர்பாக அவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தமிழக திரைப்பட வர்த்தக சங்க முகவரியை மையமாக வைத்து அந்த புகாரை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் கொடுத்திருந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக சிவசக்தி பாண்டியன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவரைப் பிடிக்க பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை ஏற்று ஆயிரம் விளக்கு போலீசார் சிவசக்தி பாண்டியனை இன்று கைது செய்தனர். பின்னர் எழும்பூர் 14-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கேயார் அணியை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்றார் சிவசக்தி பாண்டியன். இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் அவர் இப்போது கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications