8 ஆண்டுகளில் 60 இளம்பெண்கள் நாசம்.. விபச்சார புரோக்கர் டெய்லர் ரவி சென்னையில் அதிரடி கைது
8 ஆண்டுகளுக்கு பிறகு டெய்லர் ரவி கைது செய்யப்பட்டார்.
Recommended Video

சென்னை: ஹைடெங் பங்களா.. 60 பெண்கள்... கொட்டும் மாமூலுடன் கூடிய பணமழை.. 8 வருட விபச்சார சொகுசு வாழ்க்கை என்று வாழ்ந்து 8 வருடங்களாக போலீசாரின் கண்ணில் மண்ணை தூவிய 58 வயது டெய்லர் ரவி ஒருவழியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்ணாநகர் டவர்பார்க் அருகில் உள்ள அபார்ட்மெண்ட்டில் ஒன்றில்தான் ரவி வாழ்ந்து வந்தது. இவர் ராமநாதபுரம் ஊரணிப்பேட்டையை சேர்ந்தவர். பல பெண்களை வைத்து ரவி பாலியல் தொழில் செய்து வருபவர். இதனால் 8 வழக்குகள்கூட இவர் மீது உள்ளது.
[கேரளத்தில் மீண்டும் ரெட் அலர்ட்... 3 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்!.. மூணாறுக்கு வரவேண்டாம்!]

ரவி எஸ்கேப்
சில நடிகைகளை இறக்கிவிட்டு விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்த கன்னட பிரசாத்துக்கு பிறகு ரவிதான் தலைதூக்க ஆரம்பித்தார். எத்தனையோ முறை கையும் களவுமாக பிடிபட போகும் நேரத்தில் ரவி மாயமாகி கொண்டே வந்தார். காரணம் சில அதிகாரிகளும் ரவிக்கு உடந்தையாக இருந்து வந்ததுதான்.

60 பெண்கள் நாசம்
இதுவரை ரவி கிட்டத்தட்ட 60 பெண்களை இந்த தொழிலில் ஈடுபடுத்தி பணத்தை அள்ளி வந்திருக்கிறார். அதனால் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனோ ரவியை பிடித்தே ஆக வேண்டும் கண்டிப்பாக உத்தரவிட்டு விட்டார். இதனால் ரவியை பிடிக்க ஒரு தனிப்படையே அமைக்கப்பட்டது. அவரது ரகசிய நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டன.

கன்னட நடிகை பிரியா
கடந்த 2013-ம் ஆண்டு இதே குடியிருப்பில் கன்னட நடிகை பிரியா என்பவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது போலீசார் வீட்டுக்குள் நுழைந்து நடிகை பிரியாவை பிடித்தனர். மேலும் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த மற்ற பெண்களையும் மீட்டு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். ஆனால் ரவி அப்போதும் எஸ்கேப்!!

4 பெண்கள் மீட்பு
சம்பவத்தன்று வழக்கம்போல் இளைஞர்கள் ரவியின் வீட்டிற்குள் போவதும் வருவதுமாக இருந்தது. இதையடுத்து அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த போலீசார் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 4 இளம்பெண்களும் மீட்டனர். ரவியையும் கைது செய்தனர்.

யார் அந்த பெரும்புள்ளிகள்?
தற்போது ரவியை போலீசார் இனி கவனிக்கும் விதத்தில் விசாரித்தால்தான் இந்த 8 வருடங்களில் செய்த அட்டூழியங்களும், இளம்பெண்களின் கதி என்னவாயிற்று என்பதும் தெரியவரும். அதோடு 8 வருடங்களாக ரவியை காப்பாற்றிய உயர் அதிகாரிகள், பெரிய தலைகள் யார் என்பதும் தெரியவரும்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications