விஏஓவுக்கு பாடம் கற்பிக்க.. லஞ்சப் பணத்துடன் கலெக்டரிடம் மனு கொடுத்து போராட்டம்.. கடலூரில் பரபரப்பு
லஞ்சம் வாங்கும் விஏஓவை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்: அரசியல்வாதிகள், அதிகாரிகள், தனிநபர் அராஜகங்கள், இவற்றையெல்லாம் கண்டித்து எவ்வளவோ போராட்டங்களை நாம் கண்டிருப்போம். குறிப்பாக லஞ்சம் வாங்குவதை கண்டிக்கும் வகையில் எத்தனையோ எதிர்ப்புகளை பொதுமக்கள் பல்வேறு வடிவங்களில் பதிவு செய்திருந்தாலும், கடலூர் அருகே உள்ள ஒரு கிராம மக்கள் நூதனமான ஒரு போராட்டத்தை வேதனையோடு நடத்த முயன்றனர்.
கடலூர் அருகே உள்ள கிராமம் நடுவீரப்பட்டு. இங்குள்ள விஏஓ என சொல்லப்படும் கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் எந்த காரியத்துக்கும் லஞ்சம் கேட்பதையே வழக்கமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக, கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வருபவர்கள், பிறப்பு, இறப்பு, இருப்பிடம், சாதி உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை வாங்க வருவார்கள். அவை தவிர பட்டா மாறுதல் செய்வதானாலும் இங்குதான் வரவேண்டும்.

இதனால் எந்த நோக்கத்துக்காக கிராம மக்கள் தன்னை நாடி வந்தாலும், அவர்களிடம் இந்த அதிகாரி லஞ்சம் கேட்டுவிடுவதாக கூறப்படுகிறது. அதிலும் பட்டா, ஓய்வூதிய சான்றிதழ் என்றால் 2000 ரூபாய் வரை லஞ்சம் தர வேண்டும் என அளவு நிர்ணயித்து உள்ளாராம். ஒருவேளை லஞ்சம் தர மறுத்துவிட்டால், அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்துவிடுவதாகவும், அத்துடன் சான்றிதழ்களையும் தர மறுத்து விடுவதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த நடுவீரப்பட்டு கிராம மக்கள் கிராம நிர்வாகி அதிகாரிக்கு எதிராக ஒன்று திரண்டனர். மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கலாம் என மனுவையும் தயார் செய்து ஆட்சியர் அலுவலகத்துக்கு கிளம்பினர். அதோடு லஞ்சம்... லஞ்சம்... என்று மட்டுமே அதிகாரி செயல்படுவதால், தங்களின் கோரிக்கை மனுவுடன் லஞ்ச பணத்தை இணைத்துக் கொண்டனர். தாங்கள் கையில் வைத்திருந்த ஒவ்வொரு மனுவிலும் ரூ.2000., ரூ.500 என சேர்த்து ஆட்சியருக்கு லஞ்சம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். மேலும் கிராம நிர்வாக அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications