சாலை மறியல்- ஒன்று கூடல்-கண்டன ஆர்ப்பாட்டம்- கருப்பு கொடி போராட்டம்..மீண்டும் போர்க்களமான தமிழகம்
காவிரி உரிமையை மீட்க தமிழகம் போர்க்கோலம் பூண்டிருக்கிறது.
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் துரோகம் செய்துள்ள மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் மீண்டும் போர்க்களமாகிவிட்டது.
செல்போன் டவரில் ஏறி போராட்டம்.... ஆற்றில் இறங்கி போராட்டம்.. ஒன்று கூட முயன்று கைது... பிச்சை பாத்திரம் ஏந்தி போராட்டம்... வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்..

தமிழகம் மீண்டும் போர்க்களமாகிவிட்டது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் தமிழகத்தின் அத்தனை பிரச்சனைகளிலும் வாழ்வுரிமை விவகாரங்களிலும் முதுகில் குத்திக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு பிரச்சனைக்கும் வீதிகளில் இறங்கி போராடிக் கொண்டே இருக்கிறது தமிழகம்.
ஜல்லிக்கட்டு உரிமையை மீட்க வரலாறு காணாத அமைதிப் புரட்சியை தமிழகம் முன்னெடுத்தது. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக கதிராமங்கலமும் நெடுவாசலும் இன்னும் கனன்று கொண்டே இருக்கின்றன.
நீட் தேர்வுக்கு எதிரான உரிமை முழக்கம் இன்னமும் எதிரொலிக்கிறது. கெயில் எரிவாயு குழாய் பதிப்பிக்க எதிர்ப்பு தெரிவித்து மேற்கு மாவட்டங்கள் போர்க்கோலம் பூண்டுள்ளன. நியூட்ரினோ எனும் நாசகார திட்டத்தைக் கண்டித்தும் ஸ்டெர்லைட் உயிர்க் கொல்லி ஆலையை மூட வலியுறுத்தியும் தென் மாவட்டங்களில் கொந்தளித்து போராடிக் கொண்டே இருக்கின்றன.
சென்னை முதல் குமரி வரையிலான மீனவர்கள் நித்தம் நித்தம் வாழ்வை பணயம் வைத்து கடலுக்குச் செல்கின்றனர். எந்த திசையிலும் தமிழர்கள் தாங்கள் பாதுகாப்பாக வாழ்வதாக உணரவே இல்லை.
இப்போது உச்சநீதிமன்றம் 6 வார கெடு விதித்தும் சட்டை செய்யாமல் தமிழகத்தை வஞ்சிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் துரோகம் செய்திருக்கிறது மத்திய அரசு. இப்போது தமிழகம் மட்டுமல்ல புதுவை மாநிலமும் இணைந்து போர்க்களத்தில் இறங்கியிருக்கின்றன.
அரசியல் கட்சிகளோ கடையடைப்பு, கருப்புக் கொடி காட்டும் போராட்டங்கள் அறிவிக்கின்றன. இத்தனை போராட்டங்களுக்குப் பின்னராவது ஜல்லிக்கட்டை மீட்டது போல ஆயிரமாயிரமாண்டு காவிரி உரிமை மீட்கப்படுமா?
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications