ஆச்சி குறித்து சர்ச்சை பேச்சு.. அமைச்சர் செல்லூர் ராஜூவை கண்டித்து காரைக்குடியில் ஆர்ப்பாட்டம்
காரைக்குடி நகரத்தார் சமூக பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூவைக் கண்டித்து காரைக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
Recommended Video

சிவகங்கை: காரைக்குடி நகரத்தார் சமூக பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூவைக் கண்டித்து காரைக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ ரஜினி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது. வேண்டுமானால் காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம் என நக்கலாக கூறியிருந்தார்.

இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது. ஆச்சி என்பது, நகரத்தார் சமூகத்தில் மணமான பெண்களை குறிக்கின்ற மரியாதைக்குரிய சொல். அவர்களை இழிவுபடுத்தும் வகையில் அமைச்சர் பேசியிருப்பதாக அந்த சமூகத்தினர் கொதித்து போயுள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூவைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நகரத்தார் சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அறுபத்துமூவர் மண்டபம் முன்பு திரண்ட நகரத்தார் சமூகத்தினர் அமைச்சர் செல்லூர் ராஜூக்கு எதிராக முழக்கமிட்டனர்.












Click it and Unblock the Notifications