ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 47ஆவது நாளாக தொடரும் போராட்டம்! நிரந்தரமாக மூடும் வரை ஓயாது.. மக்கள் ஆவேசம்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கிராம மக்களின் போராட்டம் 47 வது நாளாக நீடிக்கிறது.
Recommended Video

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கிராம மக்களின் போராட்டம் 47 வது நாளாக நீடிக்கிறது.
தூத்துக்குடியில் செயல்பட்டு தாமிர உருக்காலையான ஸ்டெர்லைட்டில் இருந்து வெளியாகும் நச்சுப்புகையால் அப்பகுதி குழந்தைகள் மற்றும் மக்கள் சுவாசக்கோளாறு, ரத்தசோகை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குடிநீரும் முற்றிலும் மாசடைந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த ஆலையை மூடவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனை கண்டித்து குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிராம மக்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலை 15 நாட்கள் மூடப்பட்டுள்ள போதும், 47வது நாளாக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தங்களின் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என்றும் கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
-
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications