போயஸ் கார்டனில் போக்குவரத்தை தடுத்து நிறுத்திய போலீசார்... பொது மக்கள் தவிப்பு!
தீபா, தீபக், மாதவன் ஆகியோரின் வருகையால் போயஸ் கார்டன் பகுதியில் போலீசார் போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர்.
சென்னை: தீபா, தீபக், மாதவன் ஆகியோரின் வருகையால் போயஸ் கார்டன் பகுதியில் போலீசார் போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாததால் பொதுமக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
ஜெயலலிதாவின் தங்களுக்குதான் சொந்தம் எனக்கூறி ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, அவரது சகோதரர் தீபக், தீபாவின் கணவர் மாதவன் ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் அங்கு திரண்டுள்ளனர்.
ஆனால் போயஸ் கார்டன்ன இல்லத்துக்குள் செல்ல தீபாவுக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு திரண்ட தீபாவின் ஆதரவாளர்கள் ஏன் தடுக்கிறீர்கள் எனக்கேட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாகனங்கள் செல்ல தடை
தீபாவின் ஆதரவாளர்கள் திரண்டதால் போயஸ் கார்டன் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதித்தனர்.

பொதுமக்கள் சிரமம்
இதனால் போயஸ் கார்டன் பகுதியில் வசிப்பவர்கள் வெளியே செல்லவும் உள்ளே வரவும் முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

போலீசார் மீது நடவடிக்கை
வாகனங்கள் செல்ல போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீசார் போக்குவரத்தை தடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அமைதியிழந்த போயஸ்கார்டன்
போயஸ் கார்டன் பகுதியில் வசிப்போரின் கார்களும் அனுமதிக்கப்படாததால் குடியிருப்பு வாசிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். போலீஸ் குவிப்பு, வாக்குவாதம், முழக்கம் உள்ளிட்டவற்றால் போயஸ்கார்டன் பகுதியில் அமைதியிழந்து காணப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications