'அமுதம்' கடைகளில் அநியாய விலைக்கு பொருட்கள் விற்பனை... மக்கள் குமுறல்!
சென்னை: அமுதம், கூட்டுறவு அங்காடிகளில், மளிகை பொருட்கள் நிர்ணயிக்கப் பட்டதை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப் படுவதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு மொத்த பண்டக சாலைகள் மூலம், பல்பொருள் அங்காடிகள் நடத்தப்படுகின்றன. 'அமுதம்' என்ற பெயரில் சென்னையில் 20 கடைகளும், கடலுாரில் மூன்று கடைகளும் என 23 கூட்டுறவு மொத்த பண்டக சாலைகளுக்கு மொத்தம் 115 பல்பொருள் அங்காடிகள் இயங்கி வருகின்றன.

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வெளிச்சந்தைகளில் விற்கப்படுவதை விட இங்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மலிவு விலையில் விற்கப் படுகின்றன.
சமீபத்தில் பருப்பு விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்த போது கூட, இந்த அங்காடிகளின் மூலம் மலிவு விலையில் அரசு இறக்குமதி செய்த பருப்பு வகைகளை விற்பனை செய்தது.
இந்நிலையில், வெளிச் சந்தையை விட அதிக விலைக்கு இந்த அங்காடிகளில் மளிகைப் பொருட்கள் விற்கப் படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தனியார் நிறுவனங்களிடம் தனிப்பட்ட முறையில் கமிஷன் பெற்று, அமுதம், கூட்டுறவு அங்காடி அதிகாரிகள் வெளிச் சந்தையைப் போலவே எம்.ஆர்.பி. விலைக்கே பொருட்களை விற்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதேபோல், காலாவதி தேதி முடிய, குறைந்த அவகாசம் உள்ள தரமற்ற பொருட்களும் அங்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications