”புல்” மப்பில் இருந்த போலீசாருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்: வேலை நேரத்தில் புல் "மப்பில்" இருந்த காவல்துறையினர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் 2 போலீசாரின் மண்டை உடைந்த சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நாடாளுமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் பெரம்பலூர் ஆயுதப்படையை சேர்ந்த போலீஸார் ஈடுபட்டிருந்தனர். இரவு சரியாக 10.30 மணிக்கு மேல் ஆயுதப்படையைச் சேர்ந்த தலைமைக்காவலர்களான ரத்னா, பிரம்மா, வேலு, முத்தையா இவர்களுடன் வாகனப்பிரிவு உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகிய ஐந்து பேரும் பெரம்பலூரில் உள்ள ஹோட்டலில் குடிபோதையில் சாப்பிட சென்றுள்ளனர்.

அப்போது துறையூர் வழியே உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்றுவிட்டு லாரியில் திரும்பிய 30க்கும் மேற்பட்டவர்களும், அதே ஹோட்டலுக்கு சாப்பிட வந்துள்ளனர்.

அப்போது லாரியில் வந்தவர்கள் அவர்களுக்குள் சத்தம் போட்டுக்கொன்டு வாக்குவாதம் செய்வதுபோல் பேசியிருக்கிறார்கள். இதை கேட்டு போதையிலிருந்த போலீஸ் முத்தையா, அசிங்கமான வார்த்தைகளால் திட்டி, "என்னடா சண்டை போட்டுக்கிறீங்க" என கேட்க, "அதை கேட்க நீயாருடா" என்று லாரியில் வந்தவர்கள் கேட்டிருக்கின்றனர்.

இதையடுத்து அங்கிருந்த ஹோட்டல் பணியாளர்கள், "அவங்க போலீஸ்காரங்கப்பா" என சொல்ல உடனே பொதுமக்கள் அமைதியாகி தொடர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

அப்போது போதை தலைக்கேறிய போலீஸ் முத்தையா " டேய்! போலீசையே எதிர்த்து பேசுறீங்களாடா " என்றபடி ஹோட்டலைவிட்டு வெளியே வந்து கீழே கிடந்த கல்லை எடுத்து லாரியில் வந்தவர்கள் மீது வீச அதில் ஒருவரின் மண்டை உடைந்து விட்டதாம்.

உறவினருக்கு ரத்தம் வடிவதை பார்த்த மற்றவர்கள் இனியும் விடக்கூடாது என போதையிலிருந்த போலீசாரை நைய புடைந்துவிட்டனர்.

இந்த தாக்குதலில் தலைமைக்காவலர்கள் பிரம்மாவும், முத்தையாவும் பலத்த காயமடைந்தனர். இருவருக்கும் மண்டை உடைந்தது. மற்ற மூன்று போலீசாரும் பொதுமக்களின் தாக்குதலுக்கு பயந்து ஓடிவிட்டனர். பிறகு அந்த கும்பல் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டது. அவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என எதுவும் தெரியவில்லை.

மண்டை உடைந்த போலீசார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் எஸ்.பி. சோனல் சந்திராவின் கவனத்துக்கு சென்றதை அடுத்து சம்மந்தப்பட்ட காவலர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+