நிவாரண உதவி கணக்கெடுப்பில் அதிகாரிகள் பாரபட்சம்... பொதுமக்கள் சாலை மறியல்
புவனகிரி: புவனகிரி அருகே வெள்ள நிவாரணம் கேட்டு பொதுமக்கள் 3 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டு, வருவாய்த்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெய்துவந்த வட கிழக்கு பருவமழையால் கடலூர் மாவட்டம் பெரும் பாதிப்படைந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், பரங்கிப்பேட்டை பேரூராட்சி பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண உதவி வழங்குவதற்காக வருவாய்த்துறையினர் கணக்கெடுப்பு நடத்தினர்.
இந்த கணக்கெடுப்பில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி ஆத்திரமடைந்த பரங்கிப்பேட்டை பேரூராட்சி பகுதி மக்கள், கணக்கெடுப்பை முறையாக நடத்த வேண்டுமெனக் கோரி நேற்று காலை சிதம்பரம்-கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் வந்து பதில் அளித்தால் தான் மறியலை கைவிடுவோம் என தெரிவித்தனர். இதையடுத்து வருவாய்த்துறை ஆய்வாளர் பொன்மலசெல்வி நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பின்னலூரில் வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி சென்னை-கும்பகோணம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தொடர்ந்து, வீரமுடையாநத்தம் கிராமத்தில் அகரம் ஆலம்பாடி-சேத்தியாத்தோப்பு சாலையில் பொதுமக்கள் நிவாரணம் வழங்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வந்த போலீசார் மற்றும் வருவாய்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தனர்.
புவனகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட எல்லைக்குடி, நத்தம்மேடு, ஜெயம்கொண்டான், மருதூர், தலைக்குளம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகள் தண்ணீரில் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த பகுதிகளில் முறையான நிவாரணம் வழங்கப்படவில்லை எனக் கூறி ஆத்திரமடைந்த 5 கிராம மக்கள் ஒன்று திரண்டு புவனகிரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதையடுத்து, தாசில்தார் ராஜவேல், புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜ் மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அனைவரும் களைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் புவனகிரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications