விருதுநகர் அருகே சாலைவிபத்தில் தம்பதி பலி.. கொதித்தெழுந்த கிராம மக்கள் திடீர் மறியல்!
சாலைவிபத்தினை தடுக்க பேரிக்கார்டு அமைக்க கோரி மறியல் நடைபெற்றது.
Recommended Video

விருதுநகர்: விருதுநகர் அருகே நடைபெற்ற சாலைவிபத்தில் கணவன்-மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், விபத்தினை தடுக்க சாலைகளில் பேரிகார்டு அமைக்கக்கோரி மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னிசேரிபதூரை சேர்ந்தவர் சவரிராஜ், 55. இவரது மனைவி ராணி 50, இவர்கள் இருவரும் இன்று காலை பட்டம்புதூர் அருகே மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது எதிரே வந்த ஜீப் எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தம்பதி இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பட்டம்புதூர் மக்கள், மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அப்பகுதியில் பேரிகார்டு அமைக்க வேண்டும் என்று கோரி ஒன்று திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
கிராம மக்களின் இந்த மறியலால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். தகவலறிந்து வந்த போலீசார் கிராம மக்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications