டாக்டர்கள் பற்றாக்குறையைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
ஸ்ரீமுஷ்ணம்: பாளையங்கோட்டை அருகே டாக்டர்கள் பற்றாக்குறையை கண்டித்து பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டை கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு அதனைச் சுற்றியுள்ள மேல்பாதி, வடக்குபாளையம், சோழத்தரம், புடையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்வது வழக்கம். இங்கு 2 டாக்டர்கள் மற்றும் 4 செவிலியர்கள் பணிபுரிந்தனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டாக்டர் வேறு ஊருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் ஒரே ஒரு டாக்டர் மட்டுமே இங்கு பணிபுரிந்து வந்தார். இவரும் விடுமுறை, மருத்துவ முகாம் போன்ற காரணங்களால் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு முறையாக பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக அதிகாரிகளிட முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கீழ்பாதி வெங்கடகிரி, மேல்பாதி வைத்திலிங்கம் ஆகியோர் தலைமையில் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஒன்று திரண்டு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications