புத்தகத் திருவிழா நேரத்தில் மரணமடைந்த பிரபல பதிப்பாளர் வானதி திருநாவுக்கரசு!
தமிழ்ப் பதிப்பக உலகில் முக்கியப் பங்கு வகித்தவரும் பழம்பெரும் பதிப்பக உரிமையாளருமான வானதி திருநாவுக்கரசு ஜன.19 செவ்வாய்க்கிழமை இன்று அதிகாலை 12.30 மணி அளவில் காலமானார்.
அவருக்கு வயது 88. சில நாட்களாக உடல் நலம் குன்றி இருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை அபிராமபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அவர் காலமானார். பழம்பெரும் புத்தக வெளியீட்டாளரான வானதி திருநாவுக்கரசு, புத்தகச் சந்தை துவங்கியுள்ள இந்த நேரத்தில் இயற்கை எய்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலால் ஈர்க்கப்பட்டு, அதில் வரும் வானதி என்ற கதாபாத்திரத்தின் பெயரில் பதிப்பகம் தொடங்கி, ஏராளமான சரித்திர, சமூக நாவல்களை வெளியிட்டார்.
குறிப்பாக கல்கி, சாண்டில்யன் போன்ற எழுத்தாளர்களின் நாவல்கள் அனைத்தையும் வெளியிட்ட பெருமை அவருக்கு உண்டு.
வானதி திருநாவுக்கரசின் இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை இன்று மாலை 3.30க்கு சென்னை திருவொற்றியூர் எம்.எஸ்.எம். தியேட்டர் எதிரில் உள்ள தெற்கு மாட வீதி, நகரத்தார் விடுதியில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.
தகவலுக்கு: டி.ஆர். ராமநாதன், 98848 09246 / 044-24996344
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications