டிடிவி தினகரனுக்கு பெருகும் ஆதரவு.. புதுச்சேரி எம்.எல்.ஏக்கள் சந்திப்பு
புதுச்சேரி எம்எல்ஏக்கள் ஹசன்னா, அன்பழகன் ஆகியோர் டிடிவி தினகரனை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
சென்னை: டிடிவி தினகரனை அதிமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து சந்தித்து வரும் நிலையில் இன்று மாலை புதுச்சேரி எம்எல்ஏக்கள் ஹசன்னா, அன்பழகன் மற்றும் தென்காசி எம்எல்ஏ செல்வமோகன் தாஸ் ஆகியோர் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்தாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஜாமீன் பெற்று கடந்த சனிக்கிழமை சென்னை வந்தார். முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிலையில் அதிமுகவில் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் தன்னை நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கே உண்டு என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து டி.டி.வி.தினகரனுக்கு, எம்எல்ஏ-க்களின் ஆதரவு பெருகி வருகிறது. சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு வரும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ், உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி, திருத்தணி எம்எல்ஏ நரசிம்மன் ஆகியோர் தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் தென்காசி எம்எல்ஏ செல்வமோகன் தாஸ் டிடிவி தினகரனை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதன்மூலம் தினகரன் அணி ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மேலும் சில எம்எல்ஏக்கள் டிடிவி தினகரன் பக்கம் வரஉள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே புதுச்சேரி எம்எல்ஏக்கள் ஹசன்னா மற்றும் அன்பழகன் ஆகியோர் டிடிவி தினகரனை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications