புதுச்சேரி சட்டசபையில் எதிர்க்கட்சியினர் அமளி: வெளிநடப்பு செய்த காங்கிரஸார்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி சட்டசபையில் அரசின் செலவினங்கள் குறித்த அறிக்கை இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் ரங்கசாமி அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யவில்லை என்று கூறி எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர்.

அரசு பணிகளில் ஆட்களை முறைகேடாக நியமிப்பதாகவும் கூறி அதிமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும் எதிர்க்கட்சி தலைவர் வைத்திலிங்கம் பேச முயல்கையில் அவர் முன்பு இருந்த மைக் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் வேலை செய்யவில்லை.
இது தொடர்பாகவும் உறுப்பினர்கள் ஆளுங் கட்சியினரோடு வாக்குவாத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அவை நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே காங்கிரஸ் உறுப்பினர்கள் 5 பேர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications