Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாறி மாறி விழும் கொலை.. என்னாச்சு புதுச்சேரி.. எங்க போச்சு சட்டம் ஒழுங்கு?

அழகு நகரமான புதுச்சேரி கொலை நகரமாக மாறி வருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    புதுவையில் வாலிபர் ஓட ஓட வெட்டிக்கொலை- வீடியோ

    புதுச்சேரி: புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் தொடங்கி நவம்பர் வரை அரசியல் கொலைகளும், பழிக்குப் பழி கொலைகளும் அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பிரெஞ்சுக் கட்டடக் கலையையும், கலாசாரத்தையும் ஒரு சேரக் கொண்டிருக்கும் புதுச்சேரியைக் காண ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அன்றாடம் வந்து செல்கின்றனர்.

    புதுச்சேரியில் கடந்த ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் கொலை, கொள்ளை, வெடிகுண்டு வீச்சு என பல்வேறு குற்றச்சம்பங்கள் நடைபெற்றன. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன.

    அப்போதைய எதிர்க்கட்சியான காங்கிரஸ், அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வந்தன.

    முதல்வர் நாராயணசாமி

    முதல்வர் நாராயணசாமி

    இந்நிலையில், கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை பொறுப்பேற்றது. முதல்வரின் நடவடிக்கையால் கொலை, தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது, வெடிகுண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் இதனால் புதுச்சேரியில் சற்றே தனிந்திருந்தன.

    முதல்வர் பெருமிதம்

    முதல்வர் பெருமிதம்

    முதல்வர் நாராயணசாமியும், புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பயமின்றி வந்து செல்கின்றனர். வணிகர்கள் அச்சமின்றி வர்த்தகத்தை பார்த்து வருகின்றனர் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் பேசி வந்தார்.

    அதிகரிக்கும் திருட்டுக்கள்

    அதிகரிக்கும் திருட்டுக்கள்

    இந்நிலையில் தற்போது, மீண்டும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. செயின் பறிப்பு, வீடுகளின் பூட்டை உடைத்து திருடுவது, கஞ்சா விற்பனை, சூதாட்ட கிளப், மிரட்டி பணம் பறிப்பது, ஆயுதப்படை கிடங்கில் தோட்டாக்கள் மாயம் என குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    மோசடிகள் அதிகரிப்பு

    மோசடிகள் அதிகரிப்பு

    கடந்த சில மாதங்களில் 20க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

    அதோடு ஆன்லைன் மோசடி, அடிதடி போன்றவைகளும் நடைபெற்று வருகின்றன.

    இவையின்றி கடந்த சில மாதங்களாக கொலை குற்றங்களும் புதுச்சேரியில் அதிகரித்து வருகின்றன.

    கொலைகள் அதிகரிப்பு

    கொலைகள் அதிகரிப்பு

    கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 10 நாட்களில் 5 கொலைகள் நடைபெற்றன. இவற்றில் அரசியல் பிரமுகர்களின் கொலைகள் அதிகம். வெட்டிக்கொலை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை என்று தொடர் கொலை சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    புதுச்சேரி மக்கள் அச்சம்

    புதுச்சேரி மக்கள் அச்சம்

    புதுச்சேரியில் செயின் பறிப்பு, வீடுகளை உடைத்து திருடும் சம்பவம் அதிகமாக இருக்கிறது. ஒரு பவுன், இரண்டு பவுன் பறிக்கப்பட்டாலோ, திருடப்பட்டாலோ போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்தால் உடனடியாக வழக்கை எடுப்பதில்லை. இதனால், குற்றவாளிகள் எளிதாக தப்பித்து விடுகின்றனர். மேலும் சமீப நாட்களாக அடிக்கடி கொலை சம்பவம் அதிகமாகி வருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    3 ரவுடிகள் கொலை

    3 ரவுடிகள் கொலை

    புதுச்சேரி மேட்டுப்பாளையம் ராம்நகர் சுடுகாட்டில் தீபாவளி நாளன்று நள்ளிரவு மது அருந்தி கொண்டிருந்த ரவுடிகள் ஜெரால்டு, சதீஸ், ஞானசேகர் ஆகியோர் மீது எதிர்தரப்பினர் வெடிகுண்டு வீசினர். பின்னர், அவர்களை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். அடுத்த சில தினங்களில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.

    அடுத்தடுத்து கொலைகள்

    அடுத்தடுத்து கொலைகள்

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் படுகொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. புதுவை மாநில தலைமை செயலாளராக அஸ்வனி குமார் கடந்த 8ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். எனினும் படுகொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பது மக்களின் புகார்.

    பட்டப்பகலில் கொலை

    பட்டப்பகலில் கொலை

    கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கொளஞ்சியப்பன் என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொன்று விட்டு இன்று தப்பிய போது பொதுமக்களே தர்ம அடி கொடுத்து பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

    ஏமாற்றப்படும் அப்பாவிகள்

    ஏமாற்றப்படும் அப்பாவிகள்

    விளிம்பு நிலையில் இருக்கும் அப்பாவிப் பெண்களை மூளைச் சலவை செய்து விபசாரத்தில் ஈடுபடுத்தும் கும்பல்களும் புதுச்சேரியில் அதிகரித்து வருகிறது. அழகு நகரமான புதுச்சேரி மக்கள் அச்சப்படும் நகரமாக மாறி வருகிறது என்பது எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டாகும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+