காவிரி விவகாரம்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு
காவிரி விவகாரம் தொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திமுக செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.
சென்னை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திமுக செயல் தலைவரை சென்னையில் சந்தித்தார். அப்போது காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

மத்திய அரசுக்கு எதிராக இன்று அதிமுக சார்பில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்புகளின் சார்பில், இன்று மாபெரும் கடையடைப்பு போராட்டம் தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக்கண்டித்து, திமுக சார்பில் ஏப்ரல் 5ம் தேதி முழு வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள இந்த போராட்டத்திற்கு தமிழக எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யவும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திமுக செயல் தலைவர் ஸ்டாலினை இன்று சந்தித்தார். இந்த சந்திப்பில் காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications