மார்ச் 31க்குள் மேலாண்மை வாரியத்தை அமையுங்கள்... மத்திய அரசுக்கு நாராயணசாமி கடிதம்!

மார்ச் 31ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை புதுவை முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி : மார்ச் 31ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு புதுச்சேரில் முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் உச்சநீதிமன்றம் அள்தத காலக்கெடுவிற்குள் அமைக்கப்படவில்லை. இது தமிழக, புதுச்சேரி, கேரளாவிற்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Puducherry CM Narayanasamy writes letter to central minister Nitin Gadkari on cauvery issue

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக புதுச்சேரி, கேரளா ஏற்கனவே அறிவித்துள்ளன. எனினும் மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்பதை பார்ப்பதற்காக இவை பொறுத்திருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் உச்சநீதிமன்ற தீர்ப்பை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும். மார்ச் 31ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். காவிரி நீர் ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+