ஆவணங்களை திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார் கிரண்பேடி: எம்எல்ஏ லட்சுமி நாராயணன் பகீர் குற்றச்சசாட்டு!
ஆவணங்களை திருத்தும் பணியில் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி ஈடுபட்டுள்ளதாக எம்எல்ஏ லட்சுமி நாராயணன் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி: ஆவணங்களை திருத்தும் பணியில் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி ஈடுபட்டுள்ளதாக எம்எல்ஏ லட்சுமி நாராயணன் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி ஆளுநரான கிரண்பேடி அண்மையில் 3 பாஜக எம்எல்ஏக்களை நியமனம் செய்தார். அவர்களுக்கு ரகசியமாக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

புதுச்சேரி அரசியலில் இது பெரும் சர்ச்சைய ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமி ராகுல்காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் 3 எம்எல்ஏக்களின் நியமனம் செல்லாது என புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் நேற்று அறிவித்தார்.

கிரண் பேடியை கண்டித்து கடந்த வாரம் புதுச்சேரியில் பந்த் நடைபெற்ற நிலையில் இன்று காரைக்காலில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் 3 நியமன எம்எல்ஏக்கள் தொடர்பாக கோப்புகளை திருத்தும் முயற்சியில் கிரண்பேடி ஈடுபட்டுள்ளார் என குற்றம்சாட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications
