திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுவை போலீஸ்காரர் விபத்தில் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்
புதுச்சேரி: சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மூளைச்சாவு அடைந்த புதுவை மாநில போலீஸ்காரரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
புதுவை நெல்லித்தோப்பு காராமணிக்குப்பம் பூந்தோட்ட வீதியைச் சேர்ந்தவர் ராஜா(26). புதுவையில் பயிற்சி காவலராக இருந்தார். கடந்த 13ம் தேதி அவர் பைக்கில் கோரிமேடு டோல்கேட் அருகே செல்கையில் பின்னால் வந்த வேன் அவரது வாகனத்தில் மோதியது. இதில் ராஜா படுகாயம் அடைந்தார்.
புதுவை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலை தேறவில்லை. இந்நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து ராஜாவின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் பல உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன. இந்த உறுப்புகள் பலருக்கு பொருத்தப்பட்டன.
ராஜா தேசிய கால்பந்து வீரராக இருந்தவர். திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் விபத்தில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications