For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ்- மீண்டும் பேருந்துகள் இயக்கம்

புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இன்று இரவு முதல் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் என ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது

புதுச்சேரியில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 3 நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஊதிய பாக்கியை கண்டித்து 700க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Puducherry transport employees withdraws their strike

புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே உடனடியாக ஊதியத்தை வழங்க வலியுறுத்தி இந்த போராட்டம் மூன்று நாட்களுக்கு முன்பு அறிவிக்கபட்டது.

இதன் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பல பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் புதுச்சேரி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் மூன்றாவது நாளான இன்று ஊழியர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர்.

புதுச்சேரி போக்குவரத்துக்கழக இயக்குநருடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டது. பேச்சவார்த்தையில் உடன்பட்டு எட்டியுள்ளதால் போராட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து இன்று இரவு முதல் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் என ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது

English summary
Puducherry transport employees withdraws their strike. They were demanding the salary arrears. They did strike for last three days, because of this passengers troubled with transportation facilities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X