தடுப்பூசி போட்டும் பயனில்லை... ரேபிஸ் பாதித்தவர் மருத்துவமனையில் அனுமதி..
புதுக்கோட்டை:தடுப்பூசி போட்டும் பயனில்லாமல் ரேபிஸ் பரவியதால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நாய்க்கடிக்கு தடுப்பூசி போட்டும் பயனின்றி புதுக்கோட்டையைச் சேர்ந்த பாண்டி என்பவர் "ரேபிஸ்" வைரஸ் பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அறந்தாங்கி கைலாசபுரத்தைச் சேர்ந்த அடைக்கலத்தின் மகன் பாண்டி. சமையல் வேலை பார்க்கிறார். இவரை வீட்டு நாய் காலில் கடித்ததால் இரண்டு தடுப்பூசிகளை அடுத்தடுத்து போட்டார்.
இந்நிலையில், தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ரத்தப் பரிசோதனையில் பாண்டிக்கு ரேபிஸ் வைரஸ் பரவியிருப்பது தெரிந்தது. உடனடியாக டாக்டர்கள், நர்சுகள், உறவினர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பிற நோயாளிகளுக்கு போடவில்லை.
டாக்டர்கள் கூறுகையில், ''கடியின் ஆழத்தைப் பொறுத்து தடுப்பூசியுடன் கடிபட்ட இடத்தைச் சுற்றி, 'இம்யுனோ குளோபுலின்' புரதமும் செலுத்த வேண்டும். சிலர், மருத்துவமனைக்கு வரும் போது "நாய் கடித்து விட்டது" என்று மட்டும் சொல்லி ஆன்டிரேபிஸ் தடுப்பூசி போடுவர். கடிபட்ட இடத்தை டாக்டரிடம் காண்பித்தால்தான் உரிய முறையில் சிகிச்சை அளிக்க முடியும்,'' என்றனர். தற்போது பாண்டி, தீவிர சிகிச்சையில் அனுமதிக்க பட்டு உள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications