சைன்டிஸ்டு செல்லூர் ராஜூ, புறா தலையன் ஜெயக்குமார், பாலிவுட் ஆக்டர் உதயகுமார்.. புகழேந்தி விமர்சனம்
Recommended Video

சென்னை: அதிமுக அமைச்சர்களை தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதிலும் ஜெயக்குமாரின் உருவத்தை வைத்து அவர் கிண்டல் செய்துள்ளது கட்சியினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினகரன் ஆதரவாளர் புகழேந்தி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் திருமங்கலத்தில் ஆர் பி உதயகுமார் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் வாக்குவாதம் ஏற்பட்டு கூட்டுறவு தேர்தலையே சரியாக முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இப்படிப்பட்ட இவர்கள் எப்படி கட்சியை காப்பாற்ற போகிறார்கள். இவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. அதிமுக கட்சியை காப்பாற்றுவதற்காக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பதவியில் இருப்பதாக நினைக்கிறீர்களா. இல்லை. பதவி இல்லாவிட்டால் அவர்கள் செய்த முறைகேடுகள் வெளியே வர தொடங்கிவிடுமே. அதற்காகவே கட்சி நடத்தி வருகின்றனர்.

மணல் கொள்ளை
அதிமுகவை தினகரனால் மட்டுமே காப்பாற்ற முடியும். தமிழகத்தில் நடக்கும் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் அதை நியாயப்படுத்த சில தவறான உதாரணங்களை பழனிச்சாமி கூறி வருகிறார். கரூர் மாவட்டத்தில் மணல் அள்ளியதில் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் பங்கு உண்டு.

வரிசையாக மாட்டுவர்
அதுமட்டுமில்லை, மணல் எங்கெல்லாம் அள்ளுகிறார்களோ அங்கெல்லாம் அனைத்து அமைச்சர்களுக்கும் பங்கு உண்டு. தினகரன் தலைமையிலான ஆட்சி விரைவில் தமிழகத்தில் மலரும். அப்போது இந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவோம். செய்த தவறுகளுக்கு அனைவரும் வரிசையாக மாட்டுவார்கள் பாருங்கள்.

ஜெயக்குமார்
திருப்பரங்குன்றத்தில் அதிமுக டெபாசிட்டை மட்டும் பெற்றுவிட்டால் போதும் நாங்கள் அரசியலை விட்டே செல்கிறோம். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்புக்காகவே காத்துக் கொண்டிருக்கிறோம். இங்கு கொள்ளையடிக்கும் பணத்தை வெளிநாடுகளில் சென்று பதுக்கவே இந்த ஜெயக்குமார் வெளிநாடு சென்றுள்ளார்.

காமெடியன்கள்
அதிமுகவில் உள்ளவர்களை மக்கள் காமெடியன்களை போல் பார்க்கிறார்கள் என்றார் புகழேந்தி. அதுமட்டுமல்லாமல் 'பாலிவுட் ஆக்டர்' ஆர்.பி.உதயகுமார், 'சைன்டிஸ்டு' செல்லூர் ராஜூ, 'புறா தலையன்' ஜெயக்குமார் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications