Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சல்லிக்காசு தர முடியாது! ஆங்கிலேயேரை எதிர்த்த தென்னிந்தியாவின் முதல் மன்னர்! மெய்சிலிர்க்கும் வரலாறு

Subscribe to Oneindia Tamil

தென்காசி: கிழக்கிந்திய கம்பெனிக்கு வரி கொடுக்க முடியாது என சீறி ஆங்கிலேயரை நடுங்க வைத்த தென் இந்தியாவின் முதல் மன்னரான பூலித்தேவரின் வீர வரலாற்றை இங்கே பார்க்கலாம். இவரது சொந்த ஊர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா நெற்கட்டும்செவல் ஆகும்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா கடந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. ஆண்டு தோறும் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 15 ஆம் தேதி இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படும் இந்த வேளையில், இந்தியா தனது சுதந்திர காற்றை சுவாசிக்க காரணமாக இருந்த சுதந்திர போராட்ட வீரர்களையும் நாம் கண்டிப்பாக நினைவு கூர்ந்தே ஆக வேண்டும்.

independence day 2024 independence day 2024

தென்காசி மைந்தன் பூலித்தேவர்: சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கும் அளப்பறியது. ஆங்கிலேயருக்கு எதிரா தீரத்துடன் தமிழகத்தை சேர்ந்த மன்னர்கள் பலரும் எதிர்த்து போரிட்டு சுதந்திர வேள்வியை அணைய விடாமல் பார்த்துக்கொண்டனர். தென்னிந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்ட தென்னிந்தியாவின் முதல் மன்னர் குறித்து இங்கு பார்க்கலாம்..

ஆங்கிலேயர்களிடம் வரி செலுத்த முடியாது என்றும், நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பாளையக்காரரான பூலித்தேவர் தான் முதன் முதலில் எதிர்ப்பு தெரிவித்தார். ஆங்கிலேயருக்கு சல்லிக்காசு தர முடியாது என விரட்டியடித்த பூலித்தேவர் வரலாறு பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்..

நெற்கட்டும்செவல்: பூலித்தேவரின் இயற்பெயர் காத்தப்பதுரை. சித்திர புத்திரத் தேவன் - சிவஞான நாச்சியார் தம்பதிக்கு மகனாக கடந்த 1715-ம் ஆண்டு பூலித்தேவர் பிறந்தார். திருநெல்வேலி மாவட்டம் ஆவுடையார்புரம் என்கிற நெற்கட்டும்செவல் பாளையமே இவரது சொந்த ஊராகும். அதாவது இப்போது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள நெற்கட்டும்செவல் என்ற இடம் ஆகும். சிறு வயதிலேயே கல்வியில் சிறந்து விளங்கினார் பூலித்தேவர். தனது 12ஆம் வயதிலேயே சிலம்பம், மல்யுத்தம், குதிரையேற்றம், வாள்யுத்தம் எனப் பல்வேறு வீர வித்தைகளில் தேர்ச்சி பெற்று விளங்கினார் பூலித்தேவர்.

ஆற்காடு நவாப்: தற்போது தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும்செவல் பகுதியை தலைமையிடமாக கொண்டு பூலித்தேவர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். இவர் ஆட்சி பொறுப்பை ஏற்ற காலத்தில்தான், ஆங்கிலேயர் ஆட்சி வேரூன்ற தொடங்கியது. ஆற்காடு நவாப் கர்நாடக போர்களில் ஈடுபட்டு இருந்த போது ஏற்பட்ட செலவினங்களுக்காக கிழக்கிந்திய கம்பெனிக்கு நிறைய கடன்பட்டிருந்தார்.

ஆற்காடு நவாப் கடனை திரும்ப செலுத்தக் கூடிய நிலையை கடந்த போது தெற்கத்திய பாளையக்காரர்களிடம் இருந்து வரி வசூல் செய்யும் அதிகாரம் கிழக்கந்திய கம்பெனிக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் பாளையக்காரர்கள் கிழக்கிந்திய கம்பெனிக்கு வரி செலுத்த மறுத்தனர். இதனை தொடர்ந்து கிழக்கிந்திய கம்பெனிக்கும் பாளையக்காரர்களுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது.

வரி கொடுக்க மறுத்தார்: அந்த வகையில் பூலித்தேவனிடம் ஆங்கிலேயர் வரி கேட்டனர். வரி கட்ட மறுத்து தனது ஆங்கிலேய எதிர்ப்பை காட்டினார் பூலித்தேவன். ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் வரி வசூல் செய்யும் பொறுப்பு கர்னல் ஹெரான் என்பவருக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. கர்னல் ஹெரானுக்கு அஞ்சி பல பாளையக்காரர்கள் வரி செலுத்தினர். ஆனால், பூலித்தேவரோ அவரை சந்திக்கக்கூட மறுத்தார்.

சம்பந்தமே இல்லாமல் எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயருக்கு வரி செலுத்தி, அடங்கி போக பூலித்தேவருக்கு துளியும் விருப்பம் இல்லை. இவரது சுதந்திர உணர்வு அதற்கு இடம் கொடுக்கவில்லை. பூலித்தேவரை பணிய வைக்கும் திட்டத்துடன் கர்னல் ஹெரான் 1755-ம் ஆண்டு மே மாதம் ஒரு பெரும் படையுடன், நெற்கட்டும் செவ்வலை முற்றுகையிட்டார். அதன்பிறகு சிறிதளவு வரியை செலுத்துமாறு மிரட்டி பார்த்தான் கர்னல் ஹெரான்.

பூலித்தேவன் கோட்டை: ஆனால், எதுவுமே தர முடியாது என பூலித்தேவன் திட்டவட்டமாக மறுத்தார். இதனால் கோபம் அடைந்த ஹெரான், பூலித்தேவனின் கோட்டையை தாக்கினான். ஆனால் பூலித்தேவனின் கோட்டையை துப்பாக்கியால் சேதப்படுத்த முடியவில்லை. இதனால், பீரங்கிகளின் தேவையும் துணைக்கலபொருட்கள் மற்றும் படை வீரர்களின் ஊதியம் உள்ளிட்ட காரணங்களினால் ஹெரான் தனது திட்டத்தை கைவிட்டு மதுரைக்கு திரும்பினார். இதனால், கம்பெனி நிர்வாகம் ஹெரானை பணி நீக்கம் செய்தது.

யூசுப் கானால் கைப்பற்றப்பட்டது: இதையடுத்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட பாளையக்காரர்களின் கூட்டமைப்பு ஒன்றையும் பூலித்தேவர் ஏற்படுத்தினர். பூலித்தேவரின் வீரம், வளர்ச்சி, எதிர்ப்பு ஆகியவை ஆங்கிலேயரை அசைத்து பார்த்தது. இதனால் ஆங்கிலேயர்கள், பூலித்தேவரின் எதிரியான யூசுப்கான் என்பவரை பயன்படுத்தினர். திருவாங்கூர் மன்னனின் எதிர்ப்பும் பூலித்தேவருக்கு சேர்ந்தது. ஆனாலும் நெற்கட்டும்செவலை வெல்ல இயலவில்லை பூலித்தேவரே வென்றார்.

அதேவேளையில் யூசுப்கானோ, பூலித்தேவனை எப்படியும் வீழ்த்த வேண்டும் என முடிவு செய்து தனது படை பலத்தைப் பெருக்கினார். 1760-ம் ஆண்டு யூசுப்கான் நெற்கட்டும் செவ்வலை முற்றுகையிட்டார். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் இந்த போர் நீடித்தது. பூலித்தேவனின் நெற்கட்டும் செவ்வல், வாசுதேவநல்லூர், பனையூர் போன்றவை யூசுப்கானால் கைப்பற்றப்பட்டது.

இறைவனோடு கலந்தார்?: கிழக்கிந்திய கம்பெனிக்கு முறையாக தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களோடு பேச்சுவார்த்தை நடத்திய யூசுப் கான் மீது, நம்பிக்கை துரோகம் குற்றம் சுமத்தப்பட்டு 1764-ல் தூக்கிலிடப்பட்டார். யூசுப்கான் (கான்சாகிப் என்றும் மதமாற்றத்திற்கு பிறகு மருத நாயகம் என்று அழைக்கப்பட்டார்) உயிரிழந்த பிறகு நாடிழந்த நிலையில் சுற்றி வந்த பூலித்தேவர் 1764ல் திரும்பி வந்து மீண்டும் நெற்கட்டும் செவலை கைப்பற்றினார்.

எனினும் 1767-ல் கேப்டன் கேம்பெல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார். பூலித்தேவர் என்ற மாபெரும் வீரனின் இறுதிக்கால வரலாறு மர்மமாகவே உள்ளது. இவர் அந்நியரிடம் சிக்கக் கூடாது என்ற உணர்வில் தற்கொலை செய்து கொண்டதாகவும், சங்கரன்கோவிலில் இறைவனோடு கலந்துவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

நெற்கட்டும்செவல் பெயர் காரணம்: நெற்கட்டும்செவல் என்ற இந்த ஊரின் பெயர் முதலில் ஆவுடையாபுரம் என்று தான் இருந்தது. பூலித்தேவன், தன்பகுதியில் நிலத்தை அடமானம் பிடிக்கும் பண்ணையார்களுக்கோ அல்லது ஆதிக்கம் செலுத்தும் மேல் இடத்திற்கோ, வரி என்ற பெயரில் ஒரு மணி நெல்லைக் கூட யாருக்கும் கண்ணில் காட்டமாட்டாராம். இதன் காரணமாய் ஆவுடையாபுரம் என்பது நெற்கட்டும்செவல் என்று மாறியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+