எப்படியெல்லாமோ இருந்துட்டு வேற புருஷன், குழந்தைன்னு வாழலியா?.. மாணவியிடம் பேராசிரியை ஷாக் கேள்வி
சென்னை: எப்படியெல்லாமோ இருந்து விட்டு வேற புருஷன், குழந்தைன்னு எவ்வளவோ பேர் வாழறாங்கம்மா என்று மாணவியிடம் பேராசிரியை புனிதா ஷாக் கொடுத்த சம்பவம்.
திருவண்ணாமலை தண்டராம்பட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் சென்னை மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து விடுதி வார்டன்களான மைதிலி மற்றும் புனிதா ஆகியோரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அந்த இருவரும் மாணவிக்கு போன் போட்டு பேசியுள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் மாணவியை சமாதானப்படுத்தி தங்கபாண்டியனின் ஆசைக்கு இணங்குமாறு கூறியுள்ளனர்.

குடும்பம் நடத்தவில்லையா
அவர்கள் இருவரும் மாணவியிடம் பேசிய ஆடியோவில், இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. எத்தனை பொண்ணுங்க இங்க இப்படி இருந்துட்டு படிச்சு முடிச்சு கல்யாணம் பண்ணி வேறு புருஷனுடன் குடும்பம் நடத்தி பிள்ளை பெத்துக்கறாங்கன்னு தெரியுமா..

கையெழுத்து
அது மாதிரி நீயும் 4 சுவற்றுக்குள் நடக்கும் விஷயத்துக்கு ஒப்புக்கொள் என்று கூறியதற்கு அந்த மாணவி ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த பேராசிரியைகள் உனது லைஃப்பே மாறும். புகார் ஒரு காப்பி பெற்றுக் கொண்டதற்கான கையெழுத்தை போடாமல் இருக்க நீயென்னா லூசா.

டிகிரி முடிக்க முடியாது
உன் மேல எங்களால் கதை கட்ட முடியாதா. எதையாவது சொல்லிடுவோம். அப்புறம் உன் லைஃப்பே வேஸ்டாகிவிடம். நீ டிகிரியும் முடிக்க முடியாது. உன்னை டீன் சார் பழைய ஹாஸ்டலுக்கு மாற்ற சொல்லிவிட்டார். அங்கு கேன்டீனெல்லாம் இல்லை. நீயாவே வெளியே சென்று வாங்கி சாப்பிட வேண்டும்.

புனிதா மைதிலியும்
உனக்கு ஏற்கெனவே 22 வயதாகிவிட்டது. இங்கு பிரச்சினை செய்து டிஸ்கன்டினியூ செய்யும் நிலை ஏற்பட்டால் உன்னை வேறு எந்த கல்லூரியிலும் சேர்க்க மாட்டார்கள். அதனால் உங்க அப்பாகிட்ட சொல்லி கைல கால்ல விழுந்தாவது கம்ப்ளைண்ட வாபஸ் வாங்க சொல்லு. இல்லை உன்னால ஆனத பாத்துக்கோ , எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். நீ முதல்ல ஹாஸ்டல காலி செய் என்று அந்த மாணவியை மிரட்டி விரட்டுகின்றனர் புரோக்கர் போல் நடந்து கொண்ட புனிதாவும் மைதிலியும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications