நன்றி தெரிவிக்க சென்ற அமைச்சர்.., நன்றி வேண்டாம் குடிக்க தண்ணீர் தாங்கன்னு கேட்ட மக்கள் !
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வந்த அமைச்சர் வளர்மதியிடம் பொதுமக்கள் உப்பு தண்ணீர் நிரம்பிய பாட்டிலை கொடுத்து குடிக்க சொன்ன சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வளர்மதி, தமிழக அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.

இந்நிலையில், இன்று ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்தார். அப்போது கரையாம்பட்டி என்ற கிராமத்திற்கு சென்ற அமைச்சர் வளர்மதியிடம் பொதுமக்கள் தரமான குடிநீர் கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும், மக்கள் தாங்கள் அன்றாடம் குடிக்கும் உப்புத் தண்ணீரை அமைச்சரிடம் கொடுத்து குடிக்கச் சொன்னார்கலாம். அதோடு மட்டுமல்லாமல் எங்களுக்கு நன்றியெல்லாம் வேணாம், இந்த தண்ணிய நீங்க குடிப்பீங்களா தினமும் நாங்கள் இதைத்தான் குடிக்கிறோம் எனக் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி தெரிவிக்க இடத்தில் இப்படி திடீரென மக்கள் கேள்வி எழுப்பியதால், குடீநீர் பிரச்சனையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வளர்மதியும் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
-
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications