நீங்களே இப்படி செய்யலாமா? தென்காசியில் வெல்ல லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்காத கிருஷ்ணசாமி.. பின்னணி
தென்காசி: நேற்று நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வாக்களிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. கிருஷ்ணசாமி அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட நிலையில் நேற்று ஓட்டளிக்கவில்லை. இந்நிலையில் தான் அதன் பின்னணி குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது. பல இடங்களில் ஓட்டுப்பதிவு என்பது அமைதியாகவே நடந்து முடிந்தது.

தமிழகத்தை பொறுத்தமட்டில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. சில பூத்களில் லேசான வாக்குவாதம், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பிரச்சனை மட்டுமே ஏற்பட்டது. அந்த பிரச்சனைகளும் உடனடியாகும் சரிசெய்யப்பட்டது. இதனால் பெரிய பிரச்சனைகள் எதுவும் ஏற்படவில்லை.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர். இந்நிலையில் தான் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று ஓட்டளிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் கிருஷ்ணசாமி வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.
இந்நிலையில் தான் நேற்றைய தினம் கிருஷ்ணசாமி ஓட்டுப்போடவில்லை. அதாவது கிருஷ்ணசாமி கோவையில் வசித்து வருகிறார். அவருக்கு கோவையில் தான் ஓட்டு உள்ளது. ஆனால் கிருஷ்ணசாமி நேற்று தென்காசி தொகுதியில் பணியில் இருந்தார். பல்வேறு பூத்களுக்கு அவர் சென்று வந்தார். இந்நிலையில் தான் கிருஷ்ணசாமி கோவைக்கு சென்று ஓட்டளிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தென்காசி தொகுதியை பொறுத்தமட்டில் திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமார் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமமுக வேட்பாளர் ஜான்பாண்டியன், நாம் தமிழர் சார்பில் இசை மதிவாணன் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். இந்த தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டியிடுவது இது முதல் முறையல்ல.
இந்த தொகுதியில் கடந்த 1998 முதல் கிருஷ்ணசாமி போட்டியிட்டு வருகிறார். 1998, 1999, 2004, 2009, 2014, 2019 என 6 தேர்தல்களில் கிருஷ்ணசாமி போட்டியிட்டுள்ளார். இந்த 6 தேர்தல்களிலும் கிருஷ்ணசாமி தோல்வியடைந்தார். தற்போது 7 வது முறையாக கிருஷ்ணசாமி அதிமுக கூட்டணியில் களமிறங்கிய நிலையில் தான் வெற்றி பெறும் முனைப்பில் தீவிர பிரசாரம் செய்து வந்ததோடு, நேற்றைய தினமும் தென்காசியிலேயே முகாமிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications