டிவிக்கு ‛செக்’ வைத்த தேர்தல் ஆணையம்.. தென்காசியில் இரட்டை இலையில் போட்டி! மனம் மாறிய கிருஷ்ணசாமி
தென்காசி: வரும் லோக்சபா தேர்தலில் தென்காசி தனி தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டிடுவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 19ல் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைந்துவிட்டது. நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கி நடைபெற உள்ளது.

இந்நிலையில் தான் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடும் நிலையில் வேட்புமனு தாக்கலும் செய்துள்ளார்.
மேலும் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடும் என கிருஷ்ணசாமி அறிவித்தார். மேலும் டிவி சின்னத்தை ஒதுக்கீடு செய்யும்படி கிருஷ்ணசாமி இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் செ்தார். ஆனால் தேர்தல் ஆணையம் டிவி சின்னத்தை ஒதுக்கீடு செய்ய மறுத்துவிட்டது. இதனால் கிருஷ்ணசாமி டிவி சின்னத்துக்கு பதில் புதிய சின்னத்தில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தற்போது கிருஷ்ணசாமியின் மனம் மாறிவிட்டது. அதாவது தனிச்சின்னத்தில் போட்டியிடும்பட்சத்தில் வெற்றி வாய்ப்பு குறையலாம். இதனால் வரும் லோக்சபா தேர்தலில் தென்காசி தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதே சிறப்பானது என அவர் நினைத்தார். இரட்டை இலை சின்னம் என்பது மக்களுக்கு நன்கு பரீட்சயமான சின்னம். இதனால் இரட்டை இலையில் போட்டியிட உள்ளதாக கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இந்த தென்காசி தொகுதி ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதோடு ஜான் பாண்டியன் தான் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். அரசியலில் ஜான் பாண்டியன் மற்றும் கிருஷ்ணசாமி எதிரெதிர் துருவங்களாக உள்ள நிலையில் இருவரும் தென்காசியில் வெற்றிக்கு மல்லுக்கட்ட உள்ளனர்.
இவர்கள் தவிர இந்த தொகுதியில் திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் இசை மதிவாணனும் போட்டியிடுகின்றனர். ராணி ஸ்ரீகுமார் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கும் நிலையில் இசை மதிவாணன் மைக் சின்னத்தில் தேர்தலை சந்திக்க உள்ளார். இவர்கள் தவிர சுயேச்சைகளும் களமிறங்கி உள்ளதால் தென்காசி லோக்சபா தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications