வர்லாம்..வர்லாம்..வீடு முன்பு கலகம் செய்யப் போவதாக அறிவித்த புதிய தமிழகம் கட்சிக்கு பாலபாரதி அழைப்பு
தம்முடைய வீடு முன்பு கலகம் செய்ய வருகை தரும் புதிய தமிழகம் கட்சியினரை வரவேற்பதாக பாலபாரதி அறிவித்துள்ளார்.
திண்டுக்கல்: டாக்டர் கிருஷ்ணசாமியை விமர்சித்ததற்காக தமது வீடு முன்பு கலகம் செய்யப் போவதாக அறிவித்த புதிய தமிழகம் கட்சியினரை வரவேற்பதாக மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி அழைப்பு விடுத்துள்ளார்.
அரியலூர் அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரி தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு என குற்றம்சாட்டி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஆனால் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியோ அனிதா மூளை சலவை செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்; சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.

அம்பலப்படுத்திய பாலபாரதி
இந்நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தமது ஃபேஸ்புக் பக்கத்தில், டாக்டர் கிருஷ்ணசாமி தமது மகளுக்கு ஜெயலலிதாவின் பரிந்துரையில்தான் மெடிக்கல் சீட் வாங்கினார். இது சட்டசபை விவாதத்திலேயே இடம் பெற்றிருக்கிறது என உண்மையை போட்டுடைத்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.

அநாகரீக பதில் தந்த டாக்டர்
இதற்கு பதில் தந்த டாக்டர் கிருஷ்ணசாமி, அந்த பொம்பளைய நான் சட்டசபையிலேயே பார்த்தது கிடையாது என அநாகரீகமாக பேசினார். இதற்கும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. பாலபாரதியும் கிருஷ்ணசாமிக்கு காட்டமாக பதிலடி தந்தார்.

போராட்டம் அறிவிப்பு
இந்நிலையில் திண்டுக்கல்லில் உள்ள பாலபாரதி வீட்டையும் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக புதிய தமிழகம் கட்சியினர் அறிவித்திருக்கின்றனர். இதற்கும் பாலபாரதி தம்முடைய ஸ்டைலில் பேஸ்புக்கில் பதிலடி கொடுத்துள்ளார்.

வர்ர்லாம் வர்லாம்...
இது தொடர்பான பாலபாரதியின் ஃபேஸ்புக் பதிவு:
இன்று எங்களது இயக்கத்தின் மாவட்ட அலுவலகத்தையும் வீட்டிற்கு முன்னாலும் புதியதமிழகம் கலகம் செய்யப்போவதாக அறிவிப்புசெய்துள்ளார்கள்.
பொய் கலகம் செய்யும்.
உண்மை புரட்சி செய்யும்.
# வர்ர்லாம் வர்லாம்...
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications