வைகோ அணிக்கு "நோ" சொன்ன விஜயகாந்த்... முதல்வர் வேட்பாளராகும் நல்லகண்ணு!!
சென்னை: வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறாது என்பது உறுதியாகிவிட்ட நிலையில் முதுபெரும் இடதுசாரித் தலைவர் நல்லகண்ணுவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க அந்த அணியினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆளும் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக வைகோ தலைமையில் மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில் இடதுசாரிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெற்றுள்ளன.
இக்கூட்டணியில் திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகளுக்கு வலைவிரிக்கப்பட்டது.

கைவிரித்த கேப்டன்
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நேரில் சென்று கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். ஆனால் எடுத்த எடுப்பிலேயே, உங்கள் கூட்டணியால் அதிமுகவுக்குத்தான் லாபமே தவிர அதிக இடங்களைக் கைப்பற்ற முடிந்தது; அனைவரும் ஒன்றாக திமுக கூட்டணிக்குப் போய்விடலாம் என விஜயகாந்த் கறாராக சொல்லிவிட்டார்.

மறைமுக குட்டு
இதனால் வைகோ அணியில் விஜயகாந்த் இடம்பெறமாட்டார் என்பது உறுதியானது. இதனால் பத்திரிகையாளர்களிடம் விஜயகாந்த் அநாகரிகமாக நடந்து கொண்டபோதும் அவரை மறைமுகமாக வைகோ விமர்சித்திருந்தார்.

முதல்வர் வேட்பாளராக நல்லகண்ணு ?
இப்படி விஜயகாந்த் கூட்டணிக்கு வரப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்ட நிலையில் முதுபெரும் இடதுசாரித் தலைவர் நல்லகண்ணுவை தங்களது கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதற்காக நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விருதுநகரில் இடிமுழக்கம்
அதுவும் விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 90-வது ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த முழக்கம் பலமாகவே எதிரொலித்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நல்லகண்ணுவை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் 10 சதவிகிதம் ஓட்டு அதிகமாகக் கிடைக்கும் என்கிறார்...அப்படியானால் ஏன் அவரையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என முழங்கியிருக்கிறார்... இதற்கு கூட்டத்தில் செம ரெஸ்பான்ஸாம்
ஆக விஜயகாந்த் வரப்போவது இல்லை என்பது உறுதி... மாற்றாக நல்லகண்ணு தலையை மீண்டும் தேர்தல் களத்தில் உருட்டுகிறார்கள்....
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications