ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்.. பணப்பட்டுவாடா நடக்கிறதா.. விடிய விடிய தீவிர சோதனை.. போலீசார் அதிரடி
ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுகிறார்களா என்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதற்காக வீடியோ பதிவுடன் கூடிய வாகன சோதனையில் அவர்கள்
சென்னை: ஆர். கே. இடைத்தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் நடத்தும் பணபட்டுவாடாவைத் தவிர்க்க போலீசார் விடிய விடிய வாகன சோதனை நடத்தினர்.
கடந்த டிசம்பர் மாதம் ஜெயலலிதா மரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து ஆர்.கே. நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

உரிய ஆவணங்கள் இன்றி…
தேர்தல் விதிமுறைகளின் படி, ஒருவர் 50 ஆயிரத்திற்கு மேல் பணத்தை கொண்டு சென்றால் அதற்குரிய ஆவணத்தை எடுத்துச் செல்ல வேண்டும். பரிசு பொருட்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவர் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொண்டு செல்ல முடியும்.

பணம் பறிமுதல்
அதற்கு மேல் பணத்தைக் கொண்டு செல்பவர்கள் அதற்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் பணம் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் போலீசார் விடிய விடிய வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பணப்பட்டுவாடா
ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க உதவி ஆய்வாளர் தலைமையில் 4 போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்.கே. நகர் முழுவதும் 8 பேர் கொண்ட குழுக்களை அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீடியோ பதிவு
கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை சோதனை செய்யும் போது வீடியோ பதிவு செய்யப்படுகிறது. ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார் பேட்டை, வைத்தியநாதன் மேம்பாலம், ஐஓசி பேருந்து நிலையம், புது வண்ணாரப்பேட்டை, சுங்கச்சாவடி பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications