திமுக அமைப்புச் செயலாளராக பொறுப்பேற்றார் ஆர்.எஸ்.பாரதி

திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் அமைப்புச் செயலாளர் பொறுப்பை ஏற்றார்.
அமைப்புச் செயலாளராக இருந்த கலியாணசுந்தரம், திமுக தலைமைக்கு சமீபத்தில் விடுத்த பகிரங்க கோரிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தயாநிதி மாறன், கனிமொழி, ராசா ஆகியோரை ஒதுக்கி வைக்க வேண்டும். மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என்று கோரியிருந்தார் கலியாணசுந்தரம்.
இது திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக கலியாணசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்குப் பதில் ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி அமைப்புச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து பாரதி தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். அப்போது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ஆர்.எஸ். பாரதி, ஆலந்தூர் நகராட்சித் தலைவராக இருந்தவர். சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டவர். கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவு செயலாளராக இருக்கிறார்.












Click it and Unblock the Notifications