நடிகர் சங்கத் தேர்தலில் ஜாதியை திணித்து விட்டார்கள் - ராதாரவி குற்றச்சாட்டு
கரூர்: நடிகர் சங்க தேர்தலை போர்க்களம் போல் விஷால் மாற்றி வருகிறார். நடிகர் சங்கத் தேர்தலில் ஜாதியைத் திணித்து விட்டனர் என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், விஷால் தலைமையில் மற்றொரு அணியினரும் என இரு தரப்பினர் போட்டியிடுகின்றனர்.
இதில் சரத்குமார் அணியை சேர்ந்த நடிகர் ராதாரவி மற்றும் குழுவினர் கரூர் மாவட்ட நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்ட கரூர் வந்தனர்.

பிடித்தவர்களுக்கே வாக்கு:
அப்போது அவர், "நடிகர் சங்க தேர்தல் என்றால் பொதுவாக ஒருவரையொருவர் கைகுலுக்கி கொண்டு அவரவருக்கு பிடித்தவர்களுக்கு வாக்கு அளித்து விட்டு போய் விடுவார்கள்.

போர்க்களமாக்க முயற்சி:
ஆனால் இந்த தேர்தலில் பாண்டவர் அணி என்று விஷால் தங்கள் அணிக்கு பெயர் வைத்து போர்க்களம் போல் சித்தரித்து உள்ளார். அப்படியானால் நாங்கள் என்ன கவுரவர்களா?.

ஆதரவாகவே இருப்போம்:
விஷால் சரித்திரம் தெரியாமல் பேசுகிறார். குழந்தை பருவத்திலேயே நாடக மேடையை பார்த்தவன் நான். நாடக நடிகர்களுக்கு சரத்குமார் அணி என்றும் ஆதரவாக இருக்கும்.

ஜாதியை நுழைத்து விட்டனர்:
நடிகர் சங்கத் தேர்தலில் ஜாதியை நுழைத்துவிட்டனர். பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள். நாடக நடிகர்கள் சுயமரியாதை உடையவர்கள். அதனால் தான், தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளாக அந்த பராம்பரியத்தில் வந்தவர்கள் ஆட்சி செய்கின்றனர்.

கூட்டம் கூட்டுவதால் என்ன பயன்:
நாடக நடிகர்களை மட்டும் நேரில் சந்தித்து, வாக்கு சேகரித்தால் போதுமானது. ஆனால், விஷால் அணியினர், நாடக நடிகர்களை சந்திக்கச் செல்லும்போது, ஆயிரக் கணக்கான ரசிகர்களையும் சேர்த்துக் கொண்டு கூட்டம் கூட்டுகிறார்கள். இதனால் யாருக்கு லாபம். நடிகர் சங்கத் தேர்தலை போராக மாற்றிவிட்டனர். நடிகர்களுக்கு நன்மை கிடைக்க, எங்கள் அணியை வெற்றி பெறச் செய்யுங்கள்.

நிலம் கொடுத்தால் விலகுகிறேன்:
தென்னிந்திய நடிகர் சங்கத்தை நாடக நடிகர்கள் இல்லாத சங்கமாக மாற்ற விஷால் முயற்சிக்கிறார். நாடக நடிகர்களுக்கு நிலம் தருவதாக விஷால் கூறுகிறார். நாடக நடிகர்களுக்கு அவர் உடனே நிலம் கொடுத்தால், நான் போட்டியில் இருந்து விலகிக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications