அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும்.. குட்நியூஸ் சொன்ன ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்
ஊட்டி : குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி வழங்கும் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று உணவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டு கிலோ ராகி (கேழ்வரகு) இலவசமாக வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக ராகி வழங்கும் திட்டத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் இன்று நீலகிரி மாவட்டம் உதகையில் தொடங்கி வைத்தனர்.

ஊட்டி அருகே உள்ள பாலகொலா கிராமத்தில் இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் உள்ள 592 குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் கட்டமாக கேழ்வரகு வழங்கப்பட்டது.
விழாவிற்கு முன்பு அமைச்சர் பெரிய கருப்பன் பேசுகையில், கேழ்வரகு வழங்கும் இந்த திட்டத்தை துவக்கி வைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஊட்டச்சத்து உணவு என்பது அனைவருக்கும் கிடைக்கும் வகையில் சிறுதானிய வகைகள் கிடைக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் மலைகளின் அரசி மாவட்டத்தில் இத்திட்டம் துவங்கப்பட்டதில் பெரும் மகிழ்ச்சி. அரசு பல திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்துகிறது.

இதேபோல் கொரோனா காலத்தில் 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாயை பொறுப்புடன் வழங்கியது கூட்டுறவுத்துறை. திமுக ஆட்சி பொறுப்பு வந்தவுடன் கூட்டுறவு வங்கியின் மூலம் விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. கலைஞர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது பொது விநியோக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கு உச்ச நீதி மன்றமே பாராட்டியது. அதே சமயம் விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் கூட்டுறவுத்துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன" இவ்வாறு அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.
முன்னதாக இன்று உதகையில் ரேஷன் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டு கிலோ ராகி (கேழ்வரகு) இலவசமாக வழங்கும் திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு, நேற்று மாலை ஊட்டியில் தமிழ்நாடு உணவுப்பொருள் நுகர்வு கழக கிடங்கை உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் ஆய்வு செய்தார்.

அப்போது பேசிய அவர், "கூட்டுறவு கடைகளில் சிறுதானிய விற்பனை தொடங்கப்பட உள்ளது. படுகர் இன மக்களின் கிராமத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ராகி விற்பனையை இரண்டு மாவட்டங்களில் பரிசோதனை முறையில் தொடங்க உள்ளோம். இதற்காக மத்திய அரசு 1350 மெட்ரிக் டன் ராகி தமிழ்நாட்டிற்கு ஒதுக்கி உள்ளது. கூட்டுறவு துறை மூலமாக சிறுதானியங்களை கொள்முதல் செய்து, கூட்டுறவுத்துறை கடைகளில் சிறுதானிய விற்பனை தொடங்கப்பட உள்ளது" என்றார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications