ஜல்லிக்கட்டு தடை நீக்கம்: ஓபிஎஸ்க்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ், கவுதமன்
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியதற்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ராகவா லாரான்ஸ், கவுதமன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர். கைது செய்யயப்பட்டவர்களை விடுவிக்கவும் வலியுறுத்தினர்.
சென்னை: ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி நடந்த போராட்டத்தின் எதிரொலி காரணமாக தற்போது பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் லாரன்ஸ் மற்றும் இயக்குனர் கவுதமன் ஆகியோர் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்ட மாணவர்கள், இளைஞர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுத்ததற்காகவும், மாணவர்கள் போராட்டத்துக்கு காவல்துறை பாதுகாப்பு அளித்ததற்காகவும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகவா லாரன்ஸ், ஜல்லிக் கட்டுக்கான தடையை நீக்கியதற் காக முதல்வர் மற்றும் பிரதமரை சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என மாணவர்கள் விரும்புகின்றனர். முதலில் முதல்வரை சந்தித்துள்ளோம்.
தமிழகம் முழுவதும், பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும். அவர்களை விடுதலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தோம். முதல்வரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்றார்.
கவுதமன் சந்திப்பு
இதையடுத்து, திரைப்பட இயக்குநர் கவுதமன், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் பார்வைதாசன், பிரதீப்குமார், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மாணவர் அரவிந்த் ஆகியோர் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்க வேண்டும், காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் அடங்கிய மனுவையும் அளித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்க வேண்டும், காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அப்போது அவர்கள் அளித்தனர்.












Click it and Unblock the Notifications