For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராகுல் "மெச்சூரிட்டி" இல்லாத தலைவர்- மு.க. ஸ்டாலின் 'பொளேர்' பேட்டி

By Mathi
|

சென்னை: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை ஒரு மெச்சூரிட்டி இல்லாத தலைவராக மக்கள் கருதுகின்றனர்.. அதனால் அவரை பிரதமர் வேட்பாளராக மக்கள் ஏற்கவில்லை என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தாக்கியுள்ளார்.

நியூஸ் எக்ஸ் தொலைக்காட்சிக்கு மு.க. ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

மோடி அலை பொய்

மோடி அலை பொய்

லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் மத்தியில் புதிய அரசு அமைப்பதில் திமுக மிக முக்கியப் பங்கு வகிக்கும். நரேந்திர மோடி அலை என்பது ஊடகங்களால் உருவாக்கப்பட்டவைதான்.

ராகுலுக்கு மெச்சூரிட்டி இல்லை

ராகுலுக்கு மெச்சூரிட்டி இல்லை

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை மன்மோகன்சிங்கின் அரசில் அமைச்சராக்கி அவரது செயல்பாட்டை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அதை செய்ய தவறிவிட்டது காங்கிரஸ்.

பிரதமர் வேட்பாளராக ஏற்கவில்லை

பிரதமர் வேட்பாளராக ஏற்கவில்லை

அதனால் ராகுல் காந்தியை ஒரு மெச்சூரிட்டி இல்லாத தலைவராகத்தான் மக்கள் பார்க்கின்றனர். அதனால் அவரை பிரதமர் வேட்பாளராகவும் மக்கள் ஏற்கவில்லை.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜெ.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜெ.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அமெரிக்காவின் ஜனாதிபதியாக வேண்டும் என்று கனவு காண உரிமை இருக்கிறது. முன்பு தான் பிரதமர் என்று பேசிய ஜெயலலிதா இப்போது இறங்கி வந்து அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு என பேசுகிறார். போகப் போக இன்னும் புதிய புதிய செய்திகளையெல்லாம் ஜெயலலிதா சொல்லிக் கொண்டிருப்பார்..

இவ்வாறு மு.க. ஸ்டாலின் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK treasurer MK Stalin has described Congress vice president Rahul Gandhi as immature leader.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X