"அந்த" நொடி.. தலைக்கு தில் பாருங்க.. நேரா கிளம்பி "அங்கயே" போறாரு.. ராகுல் வருகையால் குலுங்குது ஊட்டி
ஊட்டி: ராகுல் காந்தி நாளை வருவதால், நீலகிரி மக்கள் திக்குமுக்காடி போயிருக்கிறார்கள்.. அத்துடன் வயநாடு பெருத்த ஆர்வத்துடன் ராகுலை எதிர்நோக்கி காத்துள்ளது.
ராகுல்காந்தி, வயநாடு தொகுதிக்கு நாளை கிளம்பி செல்கிறார்.. டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு நாளை காலை ராகுல்காந்தி வர உள்ளார்.
வயநாடு: பிறகு, கார் மூலம் நீலகிரி வழியாக கேரள மாநிலம் வயநாடுவிற்கு செல்ல உள்ளார்... இதற்கு நடுவில், உதகையில் தன்னார்வ அமைப்பின் சார்பில் நடக்கும் நிகழ்வில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். பிறகு, வயநாடு செல்லும் வழியில், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமில் பொம்மன் - பெள்ளி தம்பதியினரை ராகுல் காந்தி சந்தித்து பேச உள்ளதாக தெரிகிறது.

பொம்மன், பெள்ளி தம்பதியினரை பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஆகியோர் ஏற்கெனவே நேரில் சந்தித்து உரையாடிவிட்டு சென்ற நிலையில், ராகுல் காந்தியும் நேரில் சந்தித்து பேச வருகிறார்.
ஊட்டிக்கு வருகை: அதுமட்டுமல்ல, கோவையிலிருந்து கார் மூலமாக ஊட்டிக்கு வருகிறார் ராகுல் காந்தி.. ஊட்டி அருகிலுள்ள எல்லநள்ளி பகுதியில், முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மாவை சந்தித்து உரையாட போவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷையும் அங்கு சந்திக்க போகிறாராம்.
இதைத்தவிர, ஊட்டியில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட் தயாரிப்பையும் நேரில் பார்வையிட போகிறார்.. அத்துடன், ஊட்டி அருகில் முத்தநாடு மந்தில் தோடர் பழங்குடிகளைச் சந்தித்துவிட்டு, அப்படியே வயநாடு சென்று தொகுதி மக்களை சந்திக்கவும் திட்டமிடப்பட்டு வருவதாக தெரிகிறது.
ராகுல் காந்தி வரப்போகிறார் என்றதுமே, கடந்த 2 நாட்களாகவே ஊட்டியே அமர்க்கப்பட்டு கொண்டிருக்கிறது.. வருங்கால இந்தியா அன்பு தலைவரை வரவேற்போம்.. கூடலூர் மாநகரை குலுங்க வைப்போம் என்று நீலகிரி மாவட்ட கூடலூர் காங்கிரஸ் குஷியில் உள்ளது.. ஆக மொத்தம், ராகுலை மகிழ்ச்சியுடன் வரவேற்க "மலைகளின் ராணி" தயாராகி கொண்டிருக்கிறாள்.
ப்ளான் இதுதான்: பயண திட்டங்கள் இது ஒருபுறமிருந்தாலும், ராகுலின் இந்த பயணம் மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது. காரணம், சூரத் கோர்ட்டில் அவதூறு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதற்கு பிறகு, சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டிருந்த நிலையில், ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைத்து உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட்.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ராகுல் காந்தியின் எம்பி பதவி மறுபடியும் வழங்கப்பட்டது.. இதைத்தொடர்ந்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்த நடவடிக்கையை திரும்பப் பெறுவதாக, மக்களவை செயலகம் அறிவிக்கவும், ராகுலின் அதிரடி அந்த நொடியில் இருந்துதான் ஆரம்பமானது..
ராகுல் வருகை: கிட்டத்தட்ட 136 நாட்களுக்கு பிறகு மறுபடியும் எம்பி ஆன ராகுல், நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லாத தீர்மானம் குறித்து மக்களவையில் உரையாற்றி, பாஜகவை வெலவெலக்க வைத்துவிட்டார். இப்போது அதாவது, எம்பி-யாக மீண்டும் பொறுப்பேற்று, வயநாடுககு வருவதால், பாஜகவின் கவனம் மொத்தமும் வயநாட்டில் நாளை குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications