ஜெ. பக்கத்தில் யாரும் இப்படி நின்று பேச முடியுமா.. பஞ்சரான மைக்கால் பஞ்ச் பேசிய ராகுல்
மதுரை: மதுரையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் போன்றோர் ஒரே மேடையில் அமர்ந்து பிரசாரம் செய்தனர்.
ஸ்டாலினை தொடர்ந்து பிரசாரம் செய்து ராகுல் காந்தி பேசினார். அவர் ஆங்கிலத்தில் பேசியதை மூத்த தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளருமான திருநாவுக்கரசர் தமிழில் மொழி பெயர்த்து கூறினார்.

இதற்காக ராகுல் காந்திக்கு போடியம் அமைக்கப்பட்டிருந்தது. அவருக்கு சற்று அருகில் திருநாவுக்கரசருக்கு ஸ்டேன்டுடன் மைக் கொடுக்கப்பட்டிருந்தது. இப்படியாக, சில நிமிடங்கள் மொழி பெயர்ப்பு சுமுகமாகத்தான் போனது.
ஆனால், பேசிக்கொண்டிருந்தபோது, திருநாவுக்கரசின் மைக் திடீரென கோளாறு செய்தது. இதனால் அவர் பேசியது கூட்டத்தினருக்கு கேட்கவில்லை. மைக்கை தட்டி பார்த்தார் திருநாவுக்கரசர். இதை பார்த்த ராகுல் காந்தி, தனது போடியத்தில் இருந்த 2 மைக்குகளில் ஒன்றை, பயன்படுத்திக்கொள்ளுமாறு திருநாவுக்கரசரை அழைத்தார்.
இதையடுத்து, போடியத்தில் இருந்த மைக்கில் ஒன்றை திருநாவுக்கரசரும், மற்றொன்றை ராகுல் காந்தியும் பிடித்தபடி பேசினர். அப்போது ராகுல் காந்தி சிரித்தபடியே ஒரு கமெண்ட் அடித்தார், "ஜெயலலிதா கூட்டத்தில் இப்படியெல்லாம் நடக்காது. அருகில் நின்று பேச அவர் வேறு யாரையும் அனுமதிக்க மாட்டார்" என்றார் ராகுல்.
இதை சிரித்தபடியே திருநாவுக்கரசும், தமிழில் மொழி பெயர்க்க, கூட்டத்திற்கு வந்த தொண்டர்களும், தலைவர்களும் அதைக்கேட்டு கலகலவென சிரித்தனர். ராகுல் காந்தி தனது பேச்சின்போது, ஜெயலலிதா தன்னைதானே அறிவாளி என்றும் பிறரை முட்டாள் என்றும் நினைக்க கூடியவர், நான்கு சுவர்களுக்கு உள்ளே முடங்கி கிடந்து மக்களை மதிக்காதவர் என்று விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications