ஸ்டாலின் வீட்டில் டீ பார்ட்டி... முதன் முறையாக வந்த ராகுல்காந்தி
ஸ்டாலின் வீட்டில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க ராகுல் காந்தி வருகை தந்தார். முதன்முறையாக ஸ்டாலின் வீட்டிற்கு வந்தார் ராகுல்காந்தி.
சென்னை: கருணாநிதியின் வைரவிழாவில் பங்கேற்க வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி முதன்முறையாக ஸ்டாலின் வீட்டில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க அவரது வீட்டிற்கு வந்தார்.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி சட்டசபை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதன் வைர விழாவும், அவரது 94வது பிறந்த நாள் விழாவும் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு -காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், திரிணமூல் காங்கிரஸ் லோக்சபா குழுத் தலைவர் டெரிக் ஓபராயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்க உள்ளனர்.

விழாவில் பங்கேற்க வந்துள்ள தலைவர்களுக்கு சட்டசபை எதிர்கட்சித்தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் தேநீர் விருந்து தருகிறார். இதில் பங்கேற்பதற்காக முதன் முறையாக ஸ்டாலின் வீட்டிற்கு வருகை தந்தார் ராகுல்காந்தி.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் திமுக பத்தாண்டு காலம் இருந்த போதும், பலமுறை சென்னைக்கு ராகுல்காந்தி வந்த போதும் கோபாலபுரம் வீட்டிற்கோ, ஸ்டாலின் வீட்டிற்கு ராகுல்காந்தி வந்ததில்லை.

ஸ்டாலின் வீட்டிற்கு வந்து ராகுல்காந்தி தேநீர் விருந்தில் பங்கேற்றது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேநீர் விருந்தில் பங்கேற்ற ராகுல் காந்தி வைரவிழாவில் பங்கேற்க கிளம்பி சென்றார்.
-
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications