முதல்வர் குணமடைந்து வருகிறார்... விரைவில் வீடு திரும்புவார்- ராகுல்காந்தி #rahulgandhi
சென்னை: முதல்வர் ஜெயலலிதா விரைவாக குணமடைந்து வருவதாகவும், அவர் பூரண நலம்பெற்று வீடு திரும்ப தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2 வார காலமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய, ராகுல் காந்தி இன்று திடீர் பயணமாக சென்னை வந்தார். இப்பயணம் முன்கூட்டியே திட்டமிடப்படாத திடீர் பயணமாகவே கருதப்படுகிறது.

சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களை நேரடியாக கேட்டறிந்தார். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் குழு, ராகுல் காந்திக்கு விளக்கினர். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும், ராகுல் காந்தியுடன் மருத்துமனைக்கு வந்திருந்தார்.
ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

சுமார் 40 நிமிடங்கள் மருத்துவமனைக்குள் இருந்த ராகுல்காந்தி, மருத்துவமனைக்கு வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அன்னை சோனியாகாந்தியின் ஆதரவையும், ஆறுதலையும் தெரிவிக்கவே நான் சென்னை வந்தேன். முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன்.

முதல்வர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ராகுல்காந்தி கூறினார். சில நிமிடங்கள் மட்டுமே பேசினாலும் அவருடைய பேச்சு வதந்திகளை நம்ப வேண்டாம், முதல்வர் நலம் என்பதை பதிவு செய்யும் விதமாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் இருந்து சென்னை வந்த ராகுல்காந்தியும் ஜெயலலிதாவை காணாமல் மருத்துவக்குழுவினரிடம் மட்டுமே விசாரித்து விட்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications