ஜெயலலிதா வீட்டில் ஏன் ரெய்டு? அமைச்சர் ஜெயக்குமாரின் விளக்கம் இதுதான்!
சசிகலா குடும்பத்தினர் தங்கியிருந்ததாலேயே போயஸ் கார்டனில் ரெய்டு நடத்தப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: சசிகலா குடும்பத்தினர் தங்கியிருந்ததாலேயே போயஸ் கார்டனில் ரெய்டு நடத்தப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வீட்டில் நேற்றிரவு நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பென் டிரைவ்கள், லேப்டாப் மற்றும் ஒரு கம்ப்யூட்டர், பழை ரூபாய் நோட்டுகளை மாற்றியதற்கான ஆவணங்கள் மற்றும் ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட இந்த ரெய்டுக்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஜெயலலிதா வீட்டில் ஏன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டில் ரெய்டு நடத்தியிருப்பது வேதனை அளிப்பதாக கூறினார். மேலும் இந்த ரெய்டு ஏன் வந்தது என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சசிகலா குடும்பத்தினர் தங்கியிருந்ததால்..
சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதா வீட்டில் இருந்ததே பிரச்சனை என்ற அவர், சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதா வீட்டில் தங்கியிருந்ததால் தான் இந்த ரெய்டு நடத்தப்பட்டது என்று கூறினார். ரெய்டுக்கு அடிப்படை காரணமே அந்த குடும்பத்தினர் தான் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

திசை திருப்பி ஆதாயம் தேட முயற்சி
சசிகலா குடும்பத்தால்தான் ஜெயலலிதா வீட்டில் ரெய்டு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.வருமான வரித்துறை சோதனையை திசை திருப்பி டிடிவி தினகரன் தரப்பு ஆதாயம் தேட முயற்சிக்கிறது என்றும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.

எதுவும் நடக்காது
முழு பூசணிக்காய்யை சோற்றில் மறைப்பார் தினகரன் என்றும் அவர் கூறினார். வருமான வரித்துறை சோதனையை திசை திருப்பி அவர்களால் எந்த ஆதாயமும் பெற முடியாது, எதுவும் நடக்காது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications