ரயில்கள் ரத்து: குழந்தைகள், உடைமைகளுடன் பட்டினியோடு படாத பாடுபடும் பயணிகள்- உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை: திங்கட்கிழமை பிற்பகல் முதல் புதன்கிழமை அதிகாலைவரை விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் விமானங்கள், ரயில்கள், பேருந்துகள் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மேலும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்தனர். எழும்பூரில் இருந்து இன்று (புதன்கிழமை) புறப்படும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. போக்குவரத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. .
சென்னையில் பலத்த மழை பெய்ததன் எதிரொலியாக செவ்வாய்க்கிழமை இரவு மதுரையிலிருந்து புறப்பட்ட ரயில்களில் பெரும்பாலானோர் பயணத்தை ரத்து செய்தனர்.

இன்று ரத்தான ரயில்கள் விபரம்
சென்னை எழும்பூர் - தாதர் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்:12164); சென்னை எழும்பூர் - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (ரயில் எண்:12635); சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்:12605); சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்:16105); சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்:16713) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வே உதவி எண்கள்
மேலும், ரயில் ரத்து குறித்து தகவல்களை அறிய உதவி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் - 044- 25330714
சென்னை எழும்பூர்- 044- 28190216
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை - 044-29015204; 044-29015208
மதுரை - 0452-2308250
திருச்சி - 0431-2418992; 90038 64971,90038 64960
தஞ்சாவூர் - 90030 33265; 04362-230131
விழுப்புரம் - 90038 64959

மாற்றுப்பாதையில் ரயில்கள்
சென்னையில் செவ்வாய்க்கிழமை பகல் முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. இதையடுத்து சென்னை எழும்பூரிலிருந்து மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கான பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மதுரையிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்ட பாண்டியன் விரைவு ரயில் உள்ளிட்டவை திண்டுக்கல், கரூர், ஜோலார்பேட்டை வழியாக சென்னை செல்லும் வகையில் வழித்தடம் மாற்றிவிடப்பட்டன. நெல்லை, கன்னியாகுமரி விரைவு ரயில்களும் கரூர் வழியாகவே சென்னைக்குச் சென்றன.

12 ரயில்கள் ரத்து
வெளியூரில் இருந்து எழும்பூருக்கு வந்து சேர வேண்டிய 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வர வேண்டிய ரயில்களும் உரிய நேரத்தில் வரவில்லை. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்து தண்டவாளத்தில் நிற்பதால் ரயில் நிலையத்திற்குள் எந்த ரயிலையும் அனுமதிக்க முடியவில்லை என்று தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக நள்ளிரவு வர வேண்டிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

திண்டாடிய பயணிகள்
காலை 4 மணிக்கு வரவேண்டிய ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் காலை 9.30 மணி வரை வரவில்லை. இதேபோன்று நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், பழனி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 10 ரயில்கள் சென்ட்ரலுக்குள் வரமுடியாமல் ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்தனர். அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு சென்று பேருந்துகளை பிடித்து சென்னையில் உரிய இடத்திற்கு சென்றுவிடலாம் என்று கருதினால் ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ரயிலைவிட்டு இறங்க பயணிகள் அச்சமடைந்தனர்.

குறைவான பயணிகள்
மதுரையில் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை புறப்பட்ட பாண்டியன் விரைவு ரயில் உள்ளிட்டவற்றில் கூட்டம் மிகமிகக் குறைவாகவே காணப்பட்டன. பாண்டியன் ரயிலில் முன்பதிவு செய்து ஏறி அமர்ந்த பல பயணிகள் சென்னையில் தொடர்ந்து மழை பெய்வதை அறிந்ததும் பயணத்தை ரத்து செய்து ரயிலில் இருந்து இறங்கிச் சென்றதைக் காணமுடிந்தது.

வைகை ரயில் ரத்து
மதுரையிலிருந்து சென்னைக்குச் செல்ல முன்பதிவு செய்திருந்த அரசியல் பிரமுகர்கள் பலரும் பயணத்தை ரத்து செய்தனர்.
மதுரையிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு நெல்லை, பாண்டியன், கன்னியாகுமரி விரைவு ரயில்கள் மட்டுமே புறப்பட்டுச்சென்றன. பொதிகை, முத்துநகர், செந்தூர் ஆகியவை ரத்து செய்யப்பட்டிருந்தன. வைகை விரைவு ரயில் புதன்கிழமை காலை மதுரையிலிருந்து புறப்படுவதும் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications