தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரத்தில் மாற்றம்... இன்று முதல் அமலுக்கு வந்தது!
சென்னை: தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேர மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதுவரையில் தட்கல் டிக்கெட் பயணம் செய்யக் கூடிய தேதிக்கு ஒரு நாள் முன்னதாக காலை 10 மணி முதல் வழங்கப் பட்டு வந்தது.
தற்போது இந்த முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, இனி ஏ.சி. வகுப்புகளுக்கு தனியாகவும், ஏ.சி. வசதி இல்லாத வகுப்புகளுக்கு தனியாகவும் தட்கல் முன்பதிவு நேரம் மாற்றம் அமல் படுத்தப் பட்டுள்ளது.

இன்று முதல் ஏ.சி. வகுப்பில் பயணம் செய்வதற்கான தட்கல் டிக்கெட் புக்கிங், பயண நாளுக்கு முந்தைய நாள் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதேபோல், ஏ.சி. வசதி அல்லாத வகுப்புகளுக்கு பயண தேதியின் முந்தைய நாள் காலை 11 மணிக்கு தொடங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மட்டுமின்றி, ரயில்வே ஏஜென்சிகளுக்கு தட்கல் டிக்கெட் வழங்கும் நேரமும் மாற்றப் பட்டுள்ளது. இதுவரையில் ரயில்வே டிக்கெட் ஏஜென்சிகள் ஆன்லைனில் காலை 8 மணி முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். தற்போது இந்த முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, இனி காலை 8 மணி முதல் 8.30 மணி வரை ஏஜென்சிகளுக்கு தட்கல் டிக்கெட் வினியோகம் கிடையாது. அதேபோல தட்கல் புக்கிங்கிலும் 10 மணி முதல் 10.30 மணி வரை அவர்கள் புக் செய்ய முடியாது.
இதன் மூலம், பொது மக்களுக்கு கவுண்டரிலும், ஆன்லைனிலும் எளிதாக இனி டிக்கெட் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக ஐ.ஆர்.சி.டி.சி. கூறுகின்றது.
மேலும் தட்கல் டிக்கெட்டிற்காக ஒரே நேரத்தில் ரயில்வே வெப்-சைட்டை பொதுமக்களும், ஏஜென்சிகளும் நாடுவதால் டிக்கெட் எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த நேர மாற்றம் மூலம் வெப்-சைட் ஒர்க்லோடு குறையும். எனவே ஆன்லைனில் தட்கல் டிக்கெட் எடுக்க முயற்சிப்பவர்களுக்கு எளிதாக கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications