பல்லாவரத்தில் தடம் புரண்டு கிடக்கும் தண்டவாளங்கள்.. அவதியில் மக்கள்!
சென்னை: சென்னை பல்லாவரம் ரயில் நிலையம் அருகே சாலையில் தண்டவாளங்கள் போட்டு வைக்கப் பட்டிருப்பதால், பொதுமக்கள் பெரும் இடையூறுக்கு ஆளாகி வருகின்றனர்.
பல்லாவரம் ரயில் நிலையத்தில் தண்டவாளங்களைக் கடந்து பயணிகள் விபத்துகளில் சிக்காத வண்ணம் இருப்பதற்காக சுரங்கபாதை அமைக்கப் பட்டுள்ளது. ஆனால், அந்த சாலையில் ரயில்வேவுக்குச் சொந்தமான தண்டவாளங்கள் அதிகளவில் போட்டு வைக்கப் பட்டுள்ளன.

அத்தண்டவாளங்கள் சீரற்ற முறையில் கிடப்பதால் அப்பகுதி மக்கள் சாலையில் நடந்து செல்லும் போது பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். அதே போல், இரவு நேரங்களில் அந்த சாலையில் பயணம் செய்யும் வாகனங்கள், இருட்டில் தண்டவாளங்கள் கிடப்பது தெரியாமல் அவற்றில் மோதி விபத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
சமீபகாலமாக இந்த தண்டவாளங்களால் அதிக அளவு இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு விரைந்து செயல்பட்டு அந்த தண்டவாளங்களை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications