416 நடமாடும் மருத்துவமனைகள்: தமிழகம் முழுவதும் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் திறப்பு
சென்னை: தமிழகம் முழுவதும் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் 416 நடமாடும் மருத்துவமனைகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்த மருத்துவ குழுவினர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வீடு வீடாக சென்று சிகிச்சை அளிப்பார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தால் நீர் நிலைகள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மழைக்கால நோய்கள் மக்களை மிரட்டி வருகின்றன. ஏராளமானோர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பிரச்சினையால் மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தமிழகம் முழுவதும் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் 416 நடமாடும் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திட்டத்தை தொடங்கி வைத்தார். ஒரு மருத்துவர், நர்ஸ், மருந்தகர், மருந்துவ ஆய்வாளர் உள்ளிட்டோர் இந்த மருத்துவக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
சென்னையில் மட்டும் 30 நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ், பொதுமக்களின் வசிப்பிடங்களுக்கு சென்று சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடமாடும் மருத்துவ சேவையில் தலா ஒரு மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர் உடனிருப்பர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதே போல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய, தமிழகம் முழுவதும் 770 பொது சுகாதாரக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications