வடகிழக்குப் பருவமழை: அவசர உதவி எண்கள் அறிவிப்பு - குடிநீர் வாரிய ஊழியர்களுக்கு நோ லீவ்
சென்னை: வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் இயற்கை பேரிடர் பாதிப்பு உதவிக்கு 24 மணி நேர உதவி எண்களை அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் மழை, புயல் போன்ற இயற்கை பேரிடரால் பாதிப்பு ஏற்பட்டால், உதவி பெறுவதற்கு 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் வருவாய் நிர்வாக ஆணையரின் நேரடி கட்டுப்பாட்டில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் இயங்குகிறது. இந்த மையத்தை 1070 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு அழைக்கலாம்.

மாவட்டங்களுக்கு 1077
இதுதவிர அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு மையம் செயல்படுகிறது. இதை 1077 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். எந்த இடத்தில் என்ன பிரச்னை என்று இந்த எண்ணில் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட துறைக்கு அப்பிரச்னை தெரிவிக்கப்படும்.
மின்வயர் அறுந்தால் 1913
மரம் விழுந்து கிடப்பது. மழை வெள்ளநீர்த் தேக்கம், மின்சார வயர் அறுந்து விழுதல், கட்டிட சேதம் போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தீயணைப்புத் துறை, மின்சாரத்துறை போன்ற சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து வந்து பிரச்னையை தீர்த்து வைப்பார்கள். சென்னையில் உள்ளவர்கள் 1913 என்ற எண் மூலம் மாநகராட்சியை தொடர்பு கொண்டு உதவிகள் பெறலாம்.
24 மணிநேரமும் வேலை
பருவமழை காலத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பிரதான குழாய்கள் தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. வாரியத்தின் அனைத்து அலுவலர்களும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளிக்கவும், தலைமை அலுவலகத்திலுள்ள 24 மணி நேர நுகர்வோர் குறைதீர்ப்பு பிரிவு மற்றும் அனைத்து பகுதி அலுவலகங்களும் 3 ஷிப்டுகளில், அனைத்து வேலை நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் பணியாளர்கள் பணியில் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புகார் தெரிவிக்க
புகார்களை தெரிவிக்க விரும்புபவர்கள் 044-45674567 என்ற குடிநீர் வாரிய புகார் பிரிவு எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம். மேலும், அந்தந்த பகுதி பொறியாளர்களை கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications