கடந்தாண்டு வெள்ளத்தை ஞாபகப்படுத்தி... சென்னையில் காலையிலேயே ‘கிலி’ ஏற்படுத்திய மழை!
வடகிழக்கு பருவமழை காரணமாக, தென்மேற்கு வங்ககடலில் புதிய காற்றதழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், சென்னையில் இன்று காலை பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.
சென்னை: சென்னையில் இன்று காலை பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. சிறிதுநேரமே பெய்தாலும் பலமாக மழை பெய்ததால், மக்களுக்கு கடந்தாண்டு வெள்ளம் நினைவில் வந்து, சிறிது பயம் ஏற்பட்டது மறுக்க முடியாது.
கடந்தாண்டு நவம்பர் 7-ம் தேதி முதல் தொடந்து நான்கு நாட்கள் கடலூரில் பெய்த கனமழையால், அந்த மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாய் மாறியது. பாலங்கள் உடைந்து சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. பெரியகாட்டுப்பாளையம், குறிஞ்சிப்பாடி, விசூர் என கடலூர் மாவட்டம் முழுவதும் நவம்பர் 12-ம் தேதி வரை 22 பேர் உயிரிழந்தனர்.

இந்த கனமழையால் சென்னையிலும் பாதிப்பு ஏற்பட்டது. தாம்பரம் உட்பட புறநகர்களில் வெள்ளம் ஏற்பட்டது. குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக, தென்மேற்கு வங்ககடலில் புதிய காற்றதழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் தமிழகத்தின் சில இடங்களில் இன்று(13-11-16) மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, சென்னையில் இன்று காலை பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மயிலாப்பூர், கிண்டி, அடையாறு, திருவல்லிக்கேணி, வேளச்சேரி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம். ராமாபுரம் ஆகிய இடங்களிலும் மழை பெய்தது.
காலையிலேயே பெய்த இந்த திடீர் மழையால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். சிறிது நேரமே பெய்தாலும், மழை வெளுத்து வாங்கியதால் மக்களுக்கு மனதில் லேசான அச்சம் ஏற்பட்டது.
ஆனால், சிறிது நேரத்திலேயே மழை ஓய்ந்தது. பிறகு மெல்ல சூரியன் எட்டிப் பார்க்கவும் தான் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
ஆனபோதும் தொடர்ந்து வெயில் அடித்தாலும், லேசான மேகமூட்டத்துடன் வானிலை மந்தமாகவே காணப்படுகிறது.
-
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications