மழை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
Subscribe to Oneindia Tamil
நெல்லை: தொடர்ந்து மழை பெய்து வருவதால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது.

இந்நிலையில், தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், இன்று அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியாளர் சரவண வேல்ராஜ் அறிவித்துள்ளார்.
பள்ளிகளுக்கு மட்டுமே இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்.












Click it and Unblock the Notifications